தேசிய செய்திகள்

திலீப் குமாரின் உடல்நிலை சீராக உள்ளது - மனைவி சைரா பானு தகவல் + "||" + Dilip Kumar's health is stable, still in ICU, says wife Saira Banu

திலீப் குமாரின் உடல்நிலை சீராக உள்ளது - மனைவி சைரா பானு தகவல்

திலீப் குமாரின் உடல்நிலை சீராக உள்ளது - மனைவி சைரா பானு தகவல்
திலீப் குமாரின் உடல்நிலை சீராக உள்ளதாக அவரது மனைவி சைரா பானு தெரிவித்துள்ளார்.
மும்பை, 

பாலிவுட் நடிகர்களில் ஒருவரான திலீப் குமார், 1994-ல் தாதாசாகேப் பால்கே விருதை வென்றார். மத்திய அரசின் பத்ம பூஷன், பத்ம விபூஷன் உள்ளிட்ட விருதுகளை பெற்றுள்ளார். 

சிறந்த நடிகருக்கான ஃபிலிம்ஃபேர் விருதுகளை அதிகமுறை வென்றுள்ளார். 1944-ல் நடிகராக அறிமுகமாகி, 50 ஆண்டுகளில் 65 படங்களில் நடித்துள்ளார். கடைசியாக 1998-ல் நடித்தார். வயது மூப்பு காரணமாக படங்களில் நடிப்பதை தவிர்த்து வந்தார். 98 வயது திலீப் குமாருக்குச் சமீபத்தில் மூச்சுத் திணறல் ஏற்பட்டு இரு வாரங்களுக்கு முன்பு வீடு திரும்பினார்.

சிலதினங்களுக்கு முன் அவருக்கு மூச்சுத் திணறல் மீண்டும் ஏற்பட்டதால் இந்த மாதம் 2-வது முறையாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் திலீப் குமார். மும்பை ஹிந்துஜா மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

இந்நிலையில் திலீப் குமாரின் உடல்நிலை சீராக உள்ளதாகவும், இன்னும் ஐ.சி.யுவில் சிகிச்சை பெற்று வருகிறார் என்றும் அவரது மனைவி சைரா பானு கூறியுள்ளார்.

மேலும்  நாங்கள் அவரை வீட்டிற்கு அழைத்துச் செல்ல விரும்புகிறோம், இருப்பினும் மருத்துவர்களின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறோம். இன்று அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட வாய்ப்பில்லை. அவரது ரசிகர்களின் பிரார்த்தனை தேவை, அவர் விரைவில் திரும்பி வருவார். என்றார்.

தொடர்புடைய செய்திகள்

1. அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் உடல்நிலை கவலைக்கிடம்
அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.