தேசிய செய்திகள்

டெல்லி, கர்நாடகா, தெலுங்கானாவில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம் + "||" + Current corona vulnerability situation in Delhi, Karnataka and Telangana

டெல்லி, கர்நாடகா, தெலுங்கானாவில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம்

டெல்லி, கர்நாடகா, தெலுங்கானாவில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம்
டெல்லி, கர்நாடகா, தெலுங்கானா மாநிலங்களில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம் வெளியாகி உள்ளது.
புதுடெல்லி, 

கர்நாடகா

கர்நாடகா மாநில சுகாதாரத்துறை சார்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின்படி, மாநிலத்தில் புதிதாக 2,082 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கர்நாடகாவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 28,52,079 ஆக உயர்ந்துள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 86 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்ததையடுத்து, கொரோனாவால் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 35,308 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் கடந்த 24 மணி நேரத்தில் 7,751 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 27,68,632 ஆக அதிகரித்துள்ளது. கர்நாடகாவில் தற்போது 48,116 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

டெல்லி 

டெல்லி மாநில சுகாதாரத்துறை சார்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின்படி, மாநிலத்தில் புதிதாக 86 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் டெல்லியில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 14,34,460 ஆக உயர்ந்துள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 5 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்ததையடுத்து, கொரோனாவால் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 24,988 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் கடந்த 24 மணி நேரத்தில் 106 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 14,08,456 ஆக அதிகரித்துள்ளது. டெல்லியில் தற்போது 1,016 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தெலுங்கானா

தெலுங்கானா மாநில சுகாதாரத்துறை சார்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின்படி, மாநிலத்தில் புதிதாக 848 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தெலுங்கானாவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 6,26,085 ஆக உயர்ந்துள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 6 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்ததையடுத்து, கொரோனாவால் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,684 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் கடந்த 24 மணி நேரத்தில் 1,114 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 6,09,947 ஆக அதிகரித்துள்ளது. தெலுங்கானாவில் தற்போது 12,454 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. 5 நாள் பயணமாக டெல்லி சென்றார் மம்தா பானர்ஜி; மோடி, எதிர்க்கட்சி தலைவர்களை சந்திக்கிறார்
மேற்குவங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி 5 நாள் பயணமாக நேற்று டெல்லி சென்றார். பிரதமர் மோடி, எதிர்க்கட்சித்தலைவர்களை அவர் சந்தித்து பேசுகிறார்.
2. டெல்லி ஜந்தர் மந்தரில் பெண் விவசாயிகள் நடத்திய ‘உழவர் நாடாளுமன்றம்’
வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லி ஜந்தர் மந்தரில் பெண் விவசாயிகள், உழவர் நாடாளுமன்றம் நிகழ்சியை நடத்தினர்.
3. கர்நாடக முதல் மந்திரி பொறுப்பில் இருந்து ராஜினாமா: எடியூரப்பா அறிவிப்பு
கர்நாடக முதல் மந்திரி பதவியில் இருந்து விலகுவதாக எடியூரப்பா அறிவித்துள்ளார்.
4. கர்நாடக அரசியல் பரபரப்புக்கு இடையே மாநில மந்திரி முருகேஷ் நிரானி டெல்லி வருகை
கர்நாடக முதல் மந்திரியாக உள்ள எடியூரப்பா மாற்றப்பட உள்ளதாக கடந்த சில வாரங்களாக தகவல்கள் பரவிவருகின்றன.
5. டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 58 பேருக்கு கொரோனா தொற்று
டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 58 பேருக்கு மட்டுமே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.