தேசிய செய்திகள்

பழங்குடி சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் இறந்த மனைவியின் உடலை கணவரையே சுமக்க வைத்த அவலம் + "||" + It is a pity that the wife's body was carried by her husband as she belongs to a tribal community in Odisha

பழங்குடி சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் இறந்த மனைவியின் உடலை கணவரையே சுமக்க வைத்த அவலம்

பழங்குடி சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் இறந்த மனைவியின் உடலை கணவரையே சுமக்க வைத்த அவலம்
21-ம் நூற்றாண்டில் நவீன உலகில் நாம் வாழ்ந்து கொண்டிருப்பதாக பெருமிதம் கொண்டிருந்தாலும், இன்னும் சில இடங்களில் மனிதர்கள் காட்டுமிராண்டி காலத்தில் இருந்து மீண்டு வரவில்லை என்பதை நிரூபிக்கும் விதமாக சம்பவங்கள் நடக்கத்தான் செய்கின்றன. அப்படி ஒரு சம்பவம்தான் ஒடிசாவில் நடந்துள்ளது.
உதவ மறுத்த ஊழியர்கள்
அங்கு கந்தமால் மாவட்டத்தில், மோட்டிங்கியா கிராமத்தை சேர்ந்தவர் பாலகிருஷ்ணா கன்ஹார். இவரது மனைவி ரத்த சோகையாலும், சுவாச கோளாறாலும் அவதிப்பட்டுள்ளார். அவரை சிகிச்சைக்காக கடந்த 29-ந் தேதி மாவட்ட தலைமை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அவர் சிகிச்சை பலன் அளிக்காமல், கடந்த 1-ந் தேதி இறந்து விட்டார். அவரது உடலை பிண ஊர்திக்கு எடுத்துச்செல்வதற்கு ஆஸ்பத்திரி ஊழியர்கள் உதவ மறுத்து விட்டார்கள்.

கணவர் சுமந்து சென்ற அவலம்
ஒரு பக்கம் மனைவியை இழந்த தீராத மனச்சுமை அழுத்தினாலும், மற்றொரு பக்கம் மனைவியின் உடலை கைகளில் ஏந்திக்கொண்டு 2-வது தளத்தில் இருந்து தரைத்தளத்துக்கு சுமக்க முடியாமல் சுமந்து சென்றார், கன்ஹார். தரைத்தளத்தில் ஒரு ‘ஸ்டிரெச்சர்’ காணப்பட்டது. அதில் மனைவியின் உடலை கிடத்தி, பிண ஊர்திக்கு அவரே தள்ளிச்சென்றார். வாகனத்துக்குள் உடலை ஏற்றிச்செல்ல அந்த வாகனத்தின் டிரைவரும் உதவ மறுத்து விட்டார். அந்த நேரத்தில் கன்ஹார், தனது 2 வயது குழந்தையை வைத்துக்கொண்டிருந்த, உடல் நலமற்ற தனது தந்தையின் உதவியை பெற்றார். குழந்தையை தரையில் இறக்கி விட்டு விட்டு, தந்தையும், மகனும் சேர்ந்து அந்தப் பெண்ணின் உடலை ஊர்திக்குள் எடுத்துச்சென்று கிடத்தி இருக்கிறார். கன்ஹார் தனது மனைவியின் உடலை சுமந்தவாறு சென்ற படம், சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது.

ஊழியர்கள் இடைநீக்கம்
இறந்த பெண்ணின் உடலை பிண ஊர்திக்கு எடுத்துச்செல்ல ஆஸ்பத்திரி ஊழியர்களும், பிண ஊர்தி டிரைவரும் மறுத்ததற்கு காரணம், இறந்தவர் பழங்குடியினர் என்பதுதான். அவர் பழங்குடியினராக பிறந்தது விதியின் குற்றமா இல்லை, இந்த சாதிய உலகின் குற்றமா?

இப்போது அந்த ஆஸ்பத்திரி ஊழியர்கள் 2 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்கள்.

தொடர்புடைய செய்திகள்

1. ஐஎஸ்எல் கால்பந்து தொடர் : பெங்களூரு - ஒடிசா அணிகள் இன்று பலப்பரீட்சை
பெங்களூரு அணி தனது முதல் போட்டியில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணியை 4-2 என்ற கணக்கில் வீழ்த்தியது
2. கொரோனா வைரஸ் தோற்றத்தில்...! நிலத்தில் கிடந்ததை பார்த்த விவசாயி அதிர்ச்சி
நிலத்தில் கொரோனா போலவே தோற்றம் கொண்ட வட்ட வடிவிலான பொருட்கள் கிடந்துள்ளது.இதை பார்த்து விவசாயி அதிர்ச்சி அடைந்துள்ளார்.
3. "ஸ்மார்ட்போன் வாங்க" புது மனைவியை 55 வயது நபருக்கு விற்பனை செய்த சிறுவன்
ஒடிசா மாநிலம் ராய்ப்பூர் பாலங்கீரியை சேர்ந்த 17 வயது சிறுவனுக்கு கடந்த ஜூலை மாதம் அதே பகுதியை சேர்ந்த ஒரு சிறுமியை திருமணம் செய்து வைத்தனர்.
4. ஜூனியர் உலக கோப்பை ஆக்கி போட்டியை நடத்தும் வாய்ப்பை பெற்றது ஒடிசா
ஆண்களுக்கான 12-வது ஜூனியர் உலக கோப்பை ஆக்கி போட்டியை நடத்த உத்தரபிரதேசம், ஒடிசா மாநிலங்கள் ஆர்வம் காட்டின. இந்த நிலையில் இந்த வாய்ப்பு ஒடிசாவுக்கு வழங்கப்பட்டுள்ளது.
5. மத்திய பிரதேசம்: சமோசாவால் ஒருவர் தீக்குளித்து உயிரிழந்த அவலம்
மத்திய பிரதேசத்தில் சமோசா விலை உயர்வால் ஏற்பட்ட வாக்குவாதம் தொடர்ச்சியாக ஒருவர் தீக்குளித்து உயிரிழந்த அவலம் ஏற்பட்டு உள்ளது.