தேசிய செய்திகள்

டெல்டா வகை கொரோனாவுக்கு எதிராக கோவேக்சின் தடுப்பூசி 65.2% செயல்திறன் வாய்ந்தது + "||" + Covaxin is 65.2% effective against delta type corona

டெல்டா வகை கொரோனாவுக்கு எதிராக கோவேக்சின் தடுப்பூசி 65.2% செயல்திறன் வாய்ந்தது

டெல்டா வகை கொரோனாவுக்கு எதிராக கோவேக்சின் தடுப்பூசி 65.2% செயல்திறன் வாய்ந்தது
டெல்டா வகை கொரோனாவுக்கு எதிராக கோவேக்சின் தடுப்பூசி 65.2% செயல்திறன் வாய்ந்தது என பாரத் பயோடெக் நிறுவனம் தெரிவித்துள்ளது.


புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனாவின் 2வது அலையில் டெல்டா வகை கொரோனாவால் அதிகளவு பாதிப்பு ஏற்பட்டது.  இந்நிலையில், பல்வேறு நாடுகளில் அதிக அளவில் பரவி வரும் டெல்டா வகை கொரோனாவுக்கு எதிராக கோவேக்சின் தடுப்பூசி 65.2 சதவீத செயல்திறனை கொண்டுள்ளது என பாரத் பயோடெக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த கொரோனா தடுப்பூசியை பாரத் பயோடெக் நிறுவனம் மற்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஆகியவை இணைந்து தயாரித்துள்ளது. இதன் 3வது கட்ட பரிசோதனை முடிவுகளை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது.

அதில், கொரோனா தொற்று பாதிப்பின் தீவிர அறிகுறிகளுக்கு எதிராக கோவேக்சின் தடுப்பூசி 93.4 சதவீதம் செயல்திறன் கொண்டுள்ளது.

பரிசோதனையின்போது கோவேக்சின் தடுப்பூசி செலுத்தப்பட்டவா்களில் 12 சதவீதம் பேருக்கு பொதுவான சில பக்கவிளைவுகள் ஏற்பட்டன. 0.5 சதவீதம் பேருக்கு மட்டுமே தீவிர பக்க விளைவுகள் ஏற்பட்டன. சாதாரண அறிகுறிகளுக்கு எதிராக 77.8 சதவீத செயல்திறனை கோவேக்சின் தடுப்பூசி கொண்டுள்ளது.

டெல்டா வகை கொரோனாவுக்கு எதிராக கோவேக்சின் தடுப்பூசி 65.2 சதவீத செயல்திறனை கொண்டுள்ளது. நாட்டிலுள்ள 25 பல்வேறு பகுதிகளில் 25,798 பேர் மீது கோவேக்சின் தடுப்பூசியின் 3வது கட்ட பரிசோதனைகள் நடைபெற்றுள்ளன என தெரிவித்து உள்ளது.