தேசிய செய்திகள்

புதுச்சேரியில் 45% மேல் தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது; தமிழிசை சவுந்தரராஜன் + "||" + More than 45% have been vaccinated in Pondicherry; Tamilisai Saundararajan

புதுச்சேரியில் 45% மேல் தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது; தமிழிசை சவுந்தரராஜன்

புதுச்சேரியில் 45% மேல் தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது; தமிழிசை சவுந்தரராஜன்
புதுச்சேரியில் 45% மேல் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது என தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.


புதுச்சேரி,

தெலுங்கானா ஆளுநர் மற்றும் புதுச்சேரி துணைநிலை ஆளுநரான தமிழிசை சவுந்தரராஜன் காஞ்சி காமாட்சி அம்மன் கோவிலில் குடும்பத்தினருடன் சாமி தரிசனம் மேற்கொண்டார்.  இதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், புதுச்சேரியில் 45% மேல் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

கொரானா மூன்றாவது அலை வரக்கூடாது. உயிரிழப்பு ஏற்பட கூடாது என வேண்டி கொண்டேன்.  3வது அலை வந்தாலும் எதிர்கொள்ள தயாராக உள்ளோம். கொரோனா நோய் தொற்றில் முக கவசம் போட பழகுவதுபோல், ஹெல்மெட் அணிவதும் பழகிக்கொள்ள வேண்டும்.

தமிழ்நாட்டில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டவுடன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய காத்து கொண்டு இருந்தேன்.  கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களும் முகக்கவசம், சமூக இடைவெளியை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.  கொரோனா தடுப்பூசி செலுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.
தொடர்புடைய செய்திகள்

1. உலகிற்கு பெரிய சவால் பருவகால மாற்றம்; மரக்கன்றுகளை நடுங்கள்: மேற்கு வங்காள கவர்னர்
உலகிற்கு பெரிய சவாலாக பருவகால மாற்றம் உள்ளது என்றும் அதனால் மரக்கன்றுகளை நடுங்கள் என்றும் மேற்கு வங்காள கவர்னர் கூறியுள்ளார்.
2. தமிழகத்தில் நேர்மையான ஆட்சியை பா.ஜ.க.தான் தரமுடியும்: கே. அண்ணாமலை
தமிழகத்தில் நேர்மையான ஆட்சியை பா.ஜ.க.தான் தரமுடியும் என கட்சியின் மாநில தலைவர் கே. அண்ணாமலை கூறியுள்ளார்.
3. தமிழகத்தில் அனைவருக்கும் தடுப்பூசி போடுவது உறுதி: அமைச்சர் பேட்டி
தமிழகத்தில் அனைவருக்கும் தடுப்பூசி போடுவது உறுதி என அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டியில் கூறியுள்ளார்.
4. தமிழகம் முழுவதும் 12ந்தேதி மெகா தடுப்பூசி முகாம்: அமைச்சர் மா. சுப்பிரமணியன்
தமிழகம் முழுவதும் 12ந்தேதி 40 ஆயிரம் மையங்களில் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்படும் என அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
5. ஆப்கானிஸ்தானில் உள்ள தூதரகம் கத்தாருக்கு மாற்றம்; அமெரிக்க வெளியுறவு மந்திரி
ஆப்கானிஸ்தானில் உள்ள தூதரகம் கத்தாருக்கு மாற்றப்படுகிறது என அமெரிக்க வெளியுறவு மந்திரி ஆன்டனி பிளிங்கன் கூறியுள்ளார்.