தேசிய செய்திகள்

மராட்டியத்தில் ரூ.25 லட்சம் போதைப்பொருளுடன் நைஜிரீயர்கள் 3 பேர் கைது + "||" + 3 Nigerians arrested with Rs 25 lakh worth of drugs in Maharashtra

மராட்டியத்தில் ரூ.25 லட்சம் போதைப்பொருளுடன் நைஜிரீயர்கள் 3 பேர் கைது

மராட்டியத்தில் ரூ.25 லட்சம் போதைப்பொருளுடன் நைஜிரீயர்கள் 3 பேர் கைது
மராட்டியத்தில் ரூ.25 லட்சம் மதிப்புள்ள போதைப்பொருட்களை பதுக்கி வைத்திருந்த நைஜிரீயர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மும்பை,

தானே மாவட்டம் காஷிமிரா ஹட்கேஷ் பகுதியில் உள்ள வீட்டில் போதைப்பொருள் பதுக்கி வைத்திருப்பதாக மிராபயந்தர்- வசாய்விரார் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் போலீசார் அங்கு சென்று அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் நைஜிரீயா நாட்டை சேர்ந்த 3 பேர் அங்கு தங்கி இருந்தது தெரியவந்தது. 

இதையடுத்து வீட்டில் நடத்திய சோதனையில் 100 கிராம் எடையுள்ள கொகைன், மற்றும் 655 கிராம் எடையுள்ள கஞ்சா இருந்ததை பறிமுதல் செய்தனர். இவற்றின் மொத்த மதிப்பு ரூ.25 லட்சம் ஆகும். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து 3 பேரை கைது செய்தனர். மேலும் போதைப்பொருளை எங்கிருந்து கடத்தி கொண்டு வந்தனர் என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. மராட்டியத்தில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு இன்று வெளியாகிறது: பள்ளி கல்வித்துறை மந்திரி
மராட்டியத்தில் இன்று 12-ம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியாகும் என பள்ளி கல்வித்துறை மந்திரி வர்ஷா கெய்க்வாட் அறிவித்து உள்ளார்.
2. மராட்டியத்தில் 25 மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகள்; வணிக வளாகங்களை திறக்க அனுமதி
மராட்டியத்தில் 25 மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளது. கடைகள் திறந்திருக்கும் நேரம் நீட்டிக்கப்பட்டதோடு, வணிக வளாகங்களை திறக்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.
3. மராட்டியத்தில் வெள்ளச்சேதத்தை பார்வையிட சென்ற இடத்தில் உத்தவ் தாக்கரே- பட்னாவிஸ் சந்திப்பு
வெள்ளச்சேதத்தை பார்வையிட சென்ற இடத்தில் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே, எதிர்க்கட்சி தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் திடீரென சந்தித்து பேசியது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
4. மராட்டியத்தில் மழை வெள்ளத்துக்கு உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 207 ஆக அதிகரிப்பு
மராட்டியத்தில் கனமழைக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 207 ஆக அதிகரித்து உள்ளது. 29 ஆயிரம் கால்நடைகளும் பலியாகி உள்ளன.
5. மராட்டியத்தில் வெள்ள நிவாரணம் 2 நாளில் அறிவிக்கப்படும்: அஜித்பவார்
வெள்ள நிவாரணம் இன்னும் 2 நாளில் அறிவிக்கப்படும் என்று அஜித்பவார் கூறினார்.