தேசிய செய்திகள்

நாட்டை வலுவிழக்கச் செய்ய காங்கிரஸ் முயற்சிக்கிறது; பாஜக விமர்சனம் + "||" + BJP accuses Congress of lying about Rafale deal

நாட்டை வலுவிழக்கச் செய்ய காங்கிரஸ் முயற்சிக்கிறது; பாஜக விமர்சனம்

நாட்டை வலுவிழக்கச் செய்ய காங்கிரஸ் முயற்சிக்கிறது; பாஜக விமர்சனம்
ரபேல் போா் விமான ஒப்பந்த விவகாரத்தில் மக்களிடையே காங்கிரஸ் தொடா்ந்து வதந்திகளைப் பரப்பி வருகிறது என பாஜக சாடியுள்ளது.
புதுடெல்லி,

ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் முறைகேடுகள் நடந்திருப்பதாக பிரான்சிலும் கடந்த சில மாதங்களுக்கு முன் குற்றச்சாட்டு கிளம்பி இருந்தது. தற்போது இந்த புகார்கள் தொடர்பான விசாரணைக்காக நீதிபதி ஒருவரை பிரான்ஸ் அரசு நியமித்து உள்ளது. இதைத்தொடர்ந்து ரபேல் போர் விமான ஊழல் தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் கட்சி மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளது. 

ரபேல் போா் விமான ஒப்பந்த விவகாரத்தில் தொடா்ந்து குற்றச்சாட்டுகளைத் தெரிவிப்பதன் மூலமாக நாட்டை வலுவிழக்கச் செய்ய காங்கிரஸ் முயற்சி செய்து வருவதாக பாஜக குற்றஞ்சாட்டியுள்ளது.இது தொடர்பாக பாஜக செய்தித் தொடா்பாளா் சம்பித் பத்ரா செய்தியாளர்களுக்குப் பேட்டி அளிக்கையில் கூறியதாவது:- ரபேல் போா் விமான ஒப்பந்தம் தொடா்பாக தன்னாா்வ  அமைப்பு ஒன்று பிரான்ஸில் அளித்த புகாரின் அடிப்படையிலேயே அதை விசாரிக்க நீதிபதி நியமிக்கப்பட்டுள்ளாா். இதை ஒப்பந்தத்தில் ஊழல் நடைபெற்றுள்ளது என்று எடுத்துக் கொள்ளக் கூடாது.

ரபேல் போா் விமான ஒப்பந்த விவகாரத்தில் மக்களிடையே காங்கிரஸ் தொடா்ந்து வதந்திகளைப் பரப்பி வருகிறது. இந்த ஒப்பந்தம் வாயிலாக காங்கிரஸ் கட்சிக்கு எந்தப் பலனும் கிடைக்காததால், பொய்யான ஊழல் குற்றச்சாட்டுகளை அக்கட்சி தெரிவித்து வருகிறது. இதன் மூலமாக, நாட்டை வலுவிழக்கச் செய்ய அக்கட்சி முயன்று வருகிறது” என்றார். 


தொடர்புடைய செய்திகள்

1. ரபேல் போர் விமானம் ஒப்பந்தத்தில் எந்த விதி மீறலும் இல்லை: டசால்ட் நிறுவனம் விளக்கம்
ரபேல் போர் விமானம் ஒப்பந்தத்தில் எந்த விதி மீறலும் இல்லை என்று டசால்ட் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.