தேசிய செய்திகள்

உத்தர பிரதேச உள்ளாட்சி தேர்தலில் பாஜக வெற்றி, அகிலேஷ் யாதவுக்கு கடும் பின்னடைவு + "||" + Big Win For BJP In UP Local Body Polls, Setback For Akhilesh Yadav

உத்தர பிரதேச உள்ளாட்சி தேர்தலில் பாஜக வெற்றி, அகிலேஷ் யாதவுக்கு கடும் பின்னடைவு

உத்தர பிரதேச உள்ளாட்சி தேர்தலில் பாஜக  வெற்றி, அகிலேஷ் யாதவுக்கு கடும் பின்னடைவு
உத்தர பிரதேச உள்ளாட்சி அமைப்பு தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்றுள்ளது.
லக்னோ,

உத்தர பிரதேசத்தில் பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல் மந்திரியாக யோகி ஆதித்யநாத் பதவி வகித்து வருகிறார். அடுத்த  ஆண்டு  அம்மாநில சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில்,  உள்ளாட்சி அமைப்பான ஜிலா பஞ்சாயத் (மாவட்ட கவுன்சில்) தலைவருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தல் முடிவுகளில், 75 இடங்களில் 67-ல் பாஜக வென்றுள்ளது. அகிலேஷ் யாதவின் சமாஜ்வாடி கட்சி வெறும் 5 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. 

ராஷ்ட்ரிய லோக் தள், ஜனசட்டா தள் மற்றும் சுயேட்சை ஆகியவை தலா ஒரு இடங்களில் வெற்றி பெற்றுள்ளன.  கடந்த 2016- ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாடி கட்சி 60 இடங்களில் வென்றிருந்தது.  எனினும், உள்ளாட்சி தேர்தல் முடிவுகளை கருத்தில் கொண்டு அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தலின் போக்கை கணிக்க முடியாது என்று தேர்தல் நிபுணர்கள் கூறுகின்றனர்.  

இதற்கிடையே, பாரதிய ஜனதா கட்சி , தேர்தலில் மோசடி செய்து வெற்றி பெற்றுள்ளதாகக் கூறி சமாஜ்வாடி கட்சியினர் குற்றம் சாட்டியுள்ளனர். இந்த குற்றச்சாட்டை முன்வைத்து பல இடங்களில் நேற்று சமாஜ்வாடியினர் போராட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர். பிரக்யாராஜ் நகரில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

1. காஞ்சீபுரம் உள்ளாட்சி தேர்தல் குறித்து பொதுமக்கள் புகார் அளிக்க கட்டுப்பாட்டு அறை எண்கள் அறிவிப்பு
உள்ளாட்சி தேர்தல் குறித்து பொதுமக்கள் புகார் அளிக்க கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண்களை மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார்.
2. உள்ளாட்சி அமைப்புகளில் 27 பதவிகளுக்கான தேர்தல்: வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது- மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தகவல்
உள்ளாட்சி அமைப்புகளில் 27 பதவிகளின் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று (புதன்கிழமை) தொடங்குகிறது.
3. 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் எப்போது? - இன்று மாலை அறிவிக்கிறது மாநில தேர்தல் ஆணையம்
சமீபத்தில் கூட அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் மாநில தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்தியது.
4. குஜராத்தின் அடுத்த முதல் மந்திரி யார்? பாஜக மூத்த தலைவர்கள் இன்று ஆலோசனை
குஜராத் முதல் மந்திரியாக இருந்து வந்த விஜய் ரூபானி நேற்று திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தார்.
5. காங்கிரஸ் 70 ஆண்டுகளில் உருவாக்கியதை பாஜக 7 ஆண்டுகளில் விற்றுவிட்டது; ராகுல் காந்தி
புல்வாமா தாக்குதல் நடந்தபோது பிரதமர் மோடிக்கு எதிராக எந்த ஊடகமும் கேள்வி எழுப்பவில்லை என்று ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.