தேசிய செய்திகள்

மராட்டியத்தில் அதிகபட்சமாக ஒரேநாளில் 7.85 லட்சம் பேருக்கு தடுப்பூசி + "||" + Maharashtra administers record seven lakh-plus coronavirus vaccine jabs

மராட்டியத்தில் அதிகபட்சமாக ஒரேநாளில் 7.85 லட்சம் பேருக்கு தடுப்பூசி

மராட்டியத்தில் அதிகபட்சமாக ஒரேநாளில் 7.85 லட்சம் பேருக்கு தடுப்பூசி
மராட்டியத்தில் இதுவரை இல்லாத வகையில் ஒரே நாளில் 7.85- லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
மும்பை, 

மராட்டியத்தில் நேற்று ஒரே நாளில் 7 லட்சத்திற்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டதாக மாநில அரசு அறிவித்து உள்ளது. இது பற்றி சுகாதார செயலாளர் பிரதிப் வியாஸ் தெரிவிக்கையில், "எங்களின் பழைய சாதனையை நாங்கள் முறியடித்து விட்டோம். 

நேற்று மாலை 7 மணி வரை நிலவரப்படி மாநிலத்தில் 7 லட்சத்து 85 ஆயிரத்து 311 பேருக்கு தடுப்பூசியை செலுத்தி உள்ளோம். இது மாநிலத்தின் உயர்ந்த எண்ணிக்கை. விரைவில் 8 லட்சம் இலக்கை எட்ட வாய்ப்பு உள்ளது. மாநிலத்தில் இது வரையில் மொத்தம் 3 கோடியே 38 லட்சத்து 57 ஆயிரத்து 372 பேருக்கு தடுப்பூசிகள் போடப்பட்டு உள்ளது. தடுப்பூசி போடுவதில் கடந்த 3 மாதங்களாக மராட்டியம் முதலிடத்தில் உள்ளது" என்றார்.

தொடர்புடைய செய்திகள்

2. மராட்டியத்தில் மேலும் 6,600 பேருக்கு கொரோனா தொற்று
மராட்டியத்தில் இன்று மேலும் 6,600 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
3. மராட்டியத்தில் இன்று மேலும் 6,857 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
மராட்டியத்தில் இன்று மேலும் 6,857 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
4. குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசி ஆகஸ்ட் மாதம் அறிமுகப்படுத்தப்படும் - மத்திய சுகாதாரத்துறை மந்திரி
குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசி ஆகஸ்ட் மாதம் முதல் நாட்டில் அறிமுகப்படுத்தப்படும் என்று மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.
5. மராட்டியத்தில் மழை வெள்ளத்துக்கு பலி எண்ணிக்கை 251- ஆக உயர்வு
மராட்டியத்தில் கனமழை தொடர்பான சம்பங்களில் சிக்கி 251- பேர் உயிரிழந்தனர்.