கணவரை பிரிந்து மாமனாரை திருமணம் செய்து கொண்ட பெண்


கணவரை பிரிந்து மாமனாரை திருமணம் செய்து கொண்ட பெண்
x
தினத்தந்தி 4 July 2021 1:13 PM GMT (Updated: 4 July 2021 1:13 PM GMT)

உத்தரபிரதேசத்தில் கணவரை உதறி தள்ளிவிட்டு மாமனாரை பெண் திருமணம் செய்துகொண்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.

லக்னோ,

உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள பவுடன் எனும் பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் வீட்டை விட்டு வெளியேறி வேறு இடத்தில் வசித்து வந்த நிலையில், தனது தந்தையை கண்டுபிடித்து தருமாறு காவல்நிலையத்தில் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் புகாரளித்துள்ளார். இந்நிலையில், புகாரளித்த இளைஞன் கடந்த 2016 ஆம் ஆண்டு ஒரு பெண்ணை காதலித்து அவருடன் திருமணம் செய்து கொண்டுள்ளார்.

ஆனால், இருவருக்கும் இடையில் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக இருவரும் திருமணம் செய்து கொண்ட 6 மாதத்திலேயே பிரிந்துள்ளனர். கணவன் ஒரு குடிகாரன் என்று கூறி விவாகரத்து செய்யுமாறு அந்த பெண் வற்புறுத்தி வந்தாக கூறப்படுகிறது.

இதற்கிடையில், காணாமல் போன தந்தையை குறித்து அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் நடத்தப்பட்ட விசாரணையில் அந்த இளைஞரின் தந்தை விவாகரத்து பெற்ற தனது மகனின் மனைவியை திருமணம் செய்து கொண்டு வாழ்வது தெரியவந்துள்ளது. 

இது குறித்து தகவலறிந்து அதிர்ச்சியடைந்த அந்த இளைஞன் இது தொடர்பாகவும் புகார் அளித்துள்ளார். எனவே இரு தரப்பினரையும் வரவழைத்து காவல்துறையினர் நடத்திய பேச்சு வார்த்தையில், தனது இரண்டாவது கணவருடன் தான் மகிழ்ச்சியாக இருப்பதாக அந்த பெண் கூறியுள்ளார். எனவே, இது தொடர்பாக மேலும் பேச்சு வார்த்தை நடத்தப்படும் என காவலர்கள் தெரிவித்துள்ளனர்.

Next Story