வேளாண் சட்ட எதிர்ப்பு; நாடாளுமன்றம் வெளியே வரும் 22ந்தேதி முதல் போராட்டம் நடத்த முடிவு


வேளாண் சட்ட எதிர்ப்பு; நாடாளுமன்றம் வெளியே வரும் 22ந்தேதி முதல் போராட்டம் நடத்த முடிவு
x
தினத்தந்தி 5 July 2021 12:33 AM GMT (Updated: 5 July 2021 12:33 AM GMT)

வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் 22ந்தேதி முதல் நாடாளுமன்றத்திற்கு வெளியே தினமும் போராட்டத்தில் ஈடுபட விவசாயிகள் முடிவு செய்துள்ளனர்.


புதுடெல்லி,

நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர், மழைக்கால கூட்டத்தொடர் மற்றும் குளிர்கால கூட்டத்தொடர் என ஆண்டுதோறும் 3 கூட்டத்தொடர்கள் நடைபெற்று வருகின்றன.  கொரோனா 2வது அலை காரணமாக இந்த ஆண்டு பட்ஜெட் தொடரில் பாதிப்பு ஏற்பட்டிருந்தது.

இந்நிலையில், நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் வரும் 19ந்தேதி தொடங்கி 19 நாட்கள் நடைபெறும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.  இந்த கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகள் பல்வேறு விவகாரங்களை கிளப்பும் என கூறப்படுகிறது.

இந்த சூழலில் சம்யுக்த் கிசான் மோர்ச்சா என்ற விவசாய அமைப்பு கூறும்போது, வேளாண் பெருமக்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் இந்த பருவகால கூட்டத்தொடரை பயன்படுத்த வேண்டும்.

இதற்காக அனைத்து எதிர்க்கட்சிகளுக்கும் எச்சரிக்கை கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்படும் என தெரிவித்து உள்ளது.  மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்றத்திற்கு வெளியே வரும் 22ந்தேதி தொடங்கி கூட்டத்தொடர் முடியும் வரையில், தினமும் 200 பேர் போராட்டத்தில் ஈடுபடுவது என்று முடிவு செய்யப்பட்டு உள்ளது என்றும் தெரிவித்துள்ளது.


Next Story