தேசிய செய்திகள்

இஸ்லாமியர்களை நாட்டை விட்டு வெளியேறுமாறு கூறுபவர்கள் இந்துக்கள் என கூறிக்கொள்ள தகுதியவற்றர்கள்-மோகன் பகவத் + "||" + If a Hindu says that no Muslim should live here, then that person isn’t a Hindu,” Bhagwat

இஸ்லாமியர்களை நாட்டை விட்டு வெளியேறுமாறு கூறுபவர்கள் இந்துக்கள் என கூறிக்கொள்ள தகுதியவற்றர்கள்-மோகன் பகவத்

இஸ்லாமியர்களை நாட்டை விட்டு வெளியேறுமாறு கூறுபவர்கள் இந்துக்கள் என கூறிக்கொள்ள தகுதியவற்றர்கள்-மோகன் பகவத்
இந்தியாவில் பாதுகாப்பில்லை என்ற தவறான பிரசாரத்தில் முஸ்லீம்கள் சிக்கிக்கொள்ளக் கூடாது எனவும் மோகன் பகவத் கூறினார்.
காசியாபாத்,

உத்தரபிரதேச மாநிலம், காசியாபாத்தில் முஸ்லிம் ராஷ்டீரிய மஞ்ச் நேற்று ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது: 

இஸ்லாமியர்களை நாட்டை விட்டு வெளியேறுமாறு கூறுபவர்கள் இந்துக்கள் என கூறிக்கொள்ள தகுதியவற்றர்கள்.  பசுக்காவலர் என்ற பெயரில் தாக்குவது நடத்துவது இந்துத்வா அல்ல. இந்தியாவில் இஸ்லாமியர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்ற அச்சத்தை உருவாக்க சிலர் நினைக்கின்றனர். 
இந்தியாவில் பாதுகாப்பில்லை என்ற தவறான பிரசாரத்தில் முஸ்லீம்கள் சிக்கிக்கொள்ளக் கூடாது. 

இந்து முஸ்லீம் ஒற்றுமைக்கான பணியை அரசியல் கட்சிகளிடம் ஒப்படைத்துவிடக்கூடாது.  இரு மதங்களுக்க்கு இடையேயான பிரச்சினையை பேச்சுவார்த்தை மூலமே தீர்க்க வேண்டும். ஜனநாயக நாட்டில் இந்துக்களும் முஸ்லிம்களும் ஆதிக்க சக்தியாக நினைத்துக்கொள்ளக்கூடாது. அனைவரும் இந்தியர்கள் என்ற எண்ணமே மனதில் இருக்க வேண்டும்” என்றார்.

தொடர்புடைய செய்திகள்

1. மத்திய அரசை ஆர்.எஸ்.எஸ் கட்டுப்படுத்தவில்லை: மோகன் பகவத் சொல்கிறார்
இந்திய மக்களின் மரபணு 40,000 ஆண்டுகளாக மாறாமல் இருக்கிறது. நாம் அனைவருக்கும் ஒரே மூதாதையர் தான் என மோகன் பகவத் கூறியுள்ளார்.
2. ஜம்மு காஷ்மீரில் வளர்ச்சிக்கான வழி பிறந்துள்ளது: மோகன் பகவத்
காஷ்மீரில் தேர்தல் விரைவில் நடக்கும், புதிய அரசு அங்கு உருவாகும் என்று மோகன் பகவத் பேசினார்.
3. மக்கள் தொகையை கட்டுப்படுத்த கொள்கை இருக்க வேண்டும்: மோகன் பகவத்
நாட்டின் அமைதியை சீர்குலைக்க முயற்சி நடைபெறுகிறது என்று ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் கூறினார்.
4. நான் எந்த ஒரு அமைப்பு குறித்தும் பேசவில்லை: குமாரசாமி விளக்கம்
நாட்டில் அரசு துறைகளில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பை சேர்ந்தவர்கள் உயர் பதவியில் நியமனம் செய்யப்பட்டுள்ளனர் என குமாரசாமி பேசியது சலசலப்பை ஏற்படுத்தியது.
5. தேசிய கல்வி கொள்கையை ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் திட்டம் என சொல்வதில் தவறு இல்லை: பசவராஜ் பொம்மை
தேசிய கல்வி கொள்கையை ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் திட்டம் என்று சொல்வதில் தவறு இல்லை என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை சட்டசபையில் கூறினார்.