டிசம்பர் 2021க்குள் ஒட்டுமொத்த மக்களுக்கும் தடுப்பூசி செலுத்தியிருப்போம் - ஹர்ஷ்வர்தன்


டிசம்பர் 2021க்குள் ஒட்டுமொத்த மக்களுக்கும் தடுப்பூசி செலுத்தியிருப்போம் - ஹர்ஷ்வர்தன்
x
தினத்தந்தி 5 July 2021 1:58 PM GMT (Updated: 5 July 2021 1:58 PM GMT)

டிசம்பர் 2021க்குள் தடுப்பூசி பெற தகுதியுடைய ஒட்டுமொத்த மக்களுக்கும் தடுப்பூசி செலுத்தியிருப்போம் என மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஹர்ஷ்வர்தன் கூறியுள்ளார்.

புதுடெல்லி,

கோவின் உலகளாவிய மாநாட்டில் சுகாதாரத்துறை மந்திரி ஹர்ஷ்வர்தன் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-

கோவின் இணையதளம் இந்தியாவின் டிஜிட்டல் முன்னெடுப்பின் மணிமகுடம். இது இந்தியாவில் தடுப்பூசித் திட்டத்தின் முதுகெலும்பாக இருந்திருக்கிறது. தடுப்பூசி செலுத்திக் கொள்ள விரும்புவோருக்கு உதவுவதோடு அதனை வெளிப்படைத்தன்மையுடன் செயல்படுத்த கோவின் இணையதளம் உதவியிருக்கிறது.

தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் பொதுமக்களின் பதிவு, சான்றிதழ் என அனைத்தையும் திறம்பட ஒருங்கிணைக்க கோவின் இணையதளம் உதவி உள்ளது.

இந்த இணையதளத்தில் இந்தியாவின் மூலை முடுக்கிலிருந்தெல்லாம் மக்கள் பதிவு செய்தனர். இதனால் தடுப்பூசியின் தேவையை மிகவும் நுட்பமாக அறிந்துகொள்ள முடிந்தது.

இந்தியா தடுப்பூசி திட்டத்தை செயல்படுத்தத் தொடங்கி 6 மாதங்களே ஆகியுள்ள நிலையில், இதுவரை 35 கோடி பேருக்கும் அதிகமானோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தியிருக்கிறது. டிசம்பர் 2021க்குள் தடுப்பூசி பெற தகுதியுடைய ஒட்டுமொத்த மக்களுக்கும் தடுப்பூசி செலுத்தியிருப்போம்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story