மேகதாது அணை திட்டத்தை கைவிடுவது என்ற பேச்சுக்கே இடமில்லை; எடியூரப்பா திட்டவட்டம்


மேகதாது அணை திட்டத்தை கைவிடுவது என்ற பேச்சுக்கே இடமில்லை; எடியூரப்பா திட்டவட்டம்
x
தினத்தந்தி 6 July 2021 3:14 AM GMT (Updated: 6 July 2021 3:14 AM GMT)

மேகதாது அணை திட்டத்தை கைவிட வேண்டுமென தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதிய நிலையில் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.

கர்நாடக மாநிலம் ராமநகர் மாவட்டம் கனகபுரா அருகே காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் புதியதாக அணை கட்ட கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது. மேகதாது அணை திட்டத்திற்காக ரூ.9 ஆயிரம் கோடி செலவில் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு உள்ளது. இந்த திட்டத்தை செயல்படுத்த அனுமதி கேட்டு மத்திய அரசுக்கு திட்ட அறிக்கையை கர்நாடக அரசு அனுப்பி வைத்துள்ளது.

ஆனால் இந்த திட்டத்திற்கு அனுமதி கொடுக்க கூடாது என தமிழகம் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்த நிலையில் மேகதாது அணை கட்ட எதிர்ப்பு தெரிவிக்க வேண்டாம் என்று கர்நாடக முதல்-மந்திரி எடியூரப்பா, தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதினார். அதற்கு மு.க.ஸ்டாலின் பதில் கடிதம் எழுதியுள்ளார். அதில், மேகதாது திட்டத்தை கைவிட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

இந்த நிலையில், மேகதாது அணை திட்டத்தை கைவிடுவது என்ற பேச்சுக்கே இடமில்லை என்று கர்நாடக முதல் மந்திரி எடியூரப்பா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். முன்னதாக, எத்தனை தடைகள் வந்தாலும் அணை திட்டம் நிறைவேற்றப்படும் என்று கர்நாடக சட்டத்துறை மந்திரி கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

Next Story