தலைநகர் டெல்லியிலும் பெட்ரோல் விலை ரூ.100- ஐ தாண்டியது


தலைநகர் டெல்லியிலும் பெட்ரோல் விலை ரூ.100- ஐ தாண்டியது
x
தினத்தந்தி 7 July 2021 4:59 AM GMT (Updated: 7 July 2021 4:59 AM GMT)

ஒவ்வொரு நாளும் பெட்ரோல், டீசல் விலை புதிய உச்சத்தை தொட்டு வருவது வாகன ஓட்டிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதுடெல்லி,

பெட்ரோல், டீசல் விலையை பொறுத்தவரையில், தினசரி விலை நிர்ணயம் அடிப்படையில் எண்ணெய் நிறுவனங்கள் விலையை உயர்த்துவதும், குறைப்பதுமான நிலை தற்போது இருக்கிறது. அந்தவகையில் இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்தே பெட்ரோல், டீசல் விலை தாறுமாறாக உயர்ந்து கொண்டே வருகிறது. இந்த விலை உயர்வால், ஒவ்வொரு நாளும் பெட்ரோல், டீசல் விலை புதிய உச்சத்தை தொட்டு வந்தது.

ராஜஸ்தான், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரம், ஆந்திர பிரதேசம், தெலங்கானா, கா்நாடகம், ஜம்மு-காஷ்மீா், ஒடிஸா, தமிழகம், கேரளம், பிகாா், பஞ்சாப், லடாக், சிக்கிம் ஆகிய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ஒரு லிட்டா் பெட்ரோல் விலை ரூ.100-ஐ கடந்தது. அது மட்டுமல்லாமல், ராஜஸ்தான், ஒடிஸா, மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களின் சில பகுதிகளில் ஒரு லிட்டா் டீசல் விலை ரூ.100-ஐ கடந்தது.

நாட்டின் பல மாநிலங்களில் கடந்த வாரமே பெட்ரோல் விலை 100 - ரூபாயைத் தொட்ட நிலையில், தலைநகர் டெல்லியிலும் பெட்ரோல் விலை ரூ.100- ஐ தாண்டியுள்ளது. இன்று டெல்லியில்  ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.21-க்கும், டீசல் ஒரு லிட்டர் ரூ.89.53க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Next Story