தேசிய செய்திகள்

தமிழகத்தில் சாலை விபத்துகள் 50% குறைவு: மத்திய மந்திரி பாராட்டு + "||" + 50% reduction in road accidents in Tamil Nadu: Union Minister praises

தமிழகத்தில் சாலை விபத்துகள் 50% குறைவு: மத்திய மந்திரி பாராட்டு

தமிழகத்தில் சாலை விபத்துகள் 50% குறைவு:  மத்திய மந்திரி பாராட்டு
தமிழகத்தில் சாலை விபத்துகள் 50% அளவுக்கு குறைந்துள்ளதற்கு மத்திய மந்திரி கட்காரி பாராட்டு தெரிவித்து உள்ளார்.


புதுடெல்லி,

தமிழகத்தில் சாலை விபத்துகளையும், சாலை மரணங்களையும் 50 சதவீதம் குறைத்து இலக்கை வெற்றிகரமாக எட்டியுள்ளது என மத்திய சாலை போக்குவரத்து துறை மந்திரி நிதின் கட்காரி பாராட்டு தெரிவித்து உள்ளார்.

அவர், சர்வதேச அளவிலான சாலை விபத்து தடுப்பு மற்றும் பாதுகாப்பு குறித்து காணொலி கருத்தரங்கில் கலந்து கொண்டு பேசும்போது, வருகிற 2025ம் ஆண்டுக்குள் நாட்டில் சாலை விபத்துகளின் எண்ணிக்கையையும், மரணத்தையும் பாதியாக குறைக்க இலக்கு வைத்துள்ளோம். 
வருகிற 2030ம் ஆண்டுக்குள் சாலை விபத்துகள் இல்லாத சூழலை உருவாக்குவதே இறுதி இலக்கு ஆகும்.

கடந்த ஆண்டு சுவீடனில் நடைபெற்ற மாநாட்டில் மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் சார்பில் பங்கேற்றோம். அப்போது, வருகிற 2030ம் ஆண்டுக்குள் இந்தியாவில் சாலை விபத்துகள் இல்லாத சூழலை உருவாக்குவோம் என உறுதியளித்துள்ளோம் என கூறியுள்ளார்.

விரைவில் சாலை விபத்துகளின் எண்ணிக்கை, மரணத்தை 50 சதவீதம் குறைத்து விடுவோம். அதனை நிறைவேற்றுவோம்.  நாங்கள் வகுத்த இந்த இலக்கை இன்று வெற்றிகரமாக தமிழகம் மட்டும் ஏற்கெனவே அடைந்து விட்டது.

அந்த மாநிலத்தில் சாலை விபத்துகளின் எண்ணிக்கையும், உயிரிழப்புகளின் எண்ணிக்கையும் 53% குறைந்துள்ளது.  அதற்காக எனது பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறேன் என கூறியுள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

1. ஓட்டப்பந்தயத்தில் சாதனை படைத்த மாணவனுக்கு பாராட்டு
ஓட்டப்பந்தயத்தில் சாதனை படைத்த மாணவனை அனைவரும் பாராட்டினர்.
2. 5 ஆயிரம் மரக்கன்றுகளை நட்ட சகோதரர்களுக்கு அமைச்சர் பாராட்டு
5 ஆயிரம் மரக்கன்றுகளை நட்ட சகோதரர்களை அமைச்சர் பாராட்டினார்.
3. இந்தியா பெருமை கொள்வதற்கு காரணமான சாதனையாளர்களுக்கு பாராட்டுகள்; பா.ம.க. நிறுவனர் ராமதாஸ்
டோக்கியோ பாராஒலிம்பிக் போட்டிகளில் பதக்கங்களை தட்டி சென்ற இந்திய வீரர், வீராங்கனைகளுக்கு பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
4. நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்து
நாட்டு மக்கள் அனைவருக்கும் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துகளை தெரிவித்து கொண்டார்.
5. மேற்கு வங்காளத்தில் 6.8 கிலோ கடத்தல் வெள்ளி பறிமுதல்; பி.எஸ்.எப். படை நடவடிக்கை
மேற்கு வங்காளத்தில் 6.8 கிலோ எடை கொண்ட கடத்தல் வெள்ளியை பி.எஸ்.எப். படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.