விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்கவே வேளாண் சட்டம் - நரேந்திர சிங் தோமர்


விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்கவே வேளாண் சட்டம் -  நரேந்திர சிங் தோமர்
x
தினத்தந்தி 8 July 2021 10:55 PM GMT (Updated: 8 July 2021 10:55 PM GMT)

வேளாண் சட்டங்களை எதிர்த்து போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுடன் பேச மத்திய அரசு தயாராக உள்ளது என மத்திய விவசாயத்துறை மந்திரி நரேந்திர சிங் தோமர் கூறியுள்ளார்.

புதுடெல்லி,

மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து அரியானா பஞ்சாப் மாநிலங்களின் விவசாய அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் டெல்லி எல்லையில் எட்டு மாதமாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் மத்திய விவசாய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் கூறியதாவது: விவசாய சட்டங்களை விவசாயிகள் புரிந்து கொள்ள வேண்டும். 

இது தொடர்பாக விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளுடன் பேச மத்திய அரசு தயாராக உள்ளது. இந்த சட்டங்களால் குறைந்தபட்ச ஆதரவு விலை ரத்தாகும் என்ற பேச்சுக்கே இடமில்லை.விவசாயிகள் போராட்டத்தை துவக்கிய பின் விவசாயிகளிடமிருந்து உணவு தானியங்கள் எண்ணெய் வித்துக்கள் கொள்முதல் செய்யப்படுவது அதிகரித்துள்ளது.

விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்கும் நோக்கில் தான் இந்த சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.அதனால் போராட்டத்தை கைவிட்டு மத்திய அரசுடன் ஆக்கப்பூர்வமாக பேச விவசாய அமைப்புகள் முன்வர வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story