கர்நாடகாவில் கல்லூரிகள் திறப்பது எப்போது? துணை முதல் மந்திரி பேட்டி


கர்நாடகாவில் கல்லூரிகள் திறப்பது எப்போது? துணை முதல் மந்திரி பேட்டி
x
தினத்தந்தி 9 July 2021 8:02 AM GMT (Updated: 9 July 2021 8:02 AM GMT)

கர்நாடகாவில் கல்லூரிகளை மீண்டும் திறப்பது பற்றி எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என துணை முதல் மந்திரி பேட்டியில் கூறியுள்ளார்.



பெங்களூரு,

கர்நாடகாவில் உயர்கல்வி துறையை நிர்வகித்து வரும் துணை முதல் மந்திரி அஸ்வத் நாராயண் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், 18 வயதுக்கு மேற்பட்ட கல்லூரி மாணவ மாணவியருக்கு கொரோனா தடுப்பூசி போடுவதில் அரசு கவனம் செலுத்தி வருகிறது.

கர்நாடகாவில் கல்லூரிகளை மீண்டும் திறப்பதற்கான தேதியை முடிவு செய்வது பற்றி ஆலோசனை மேற்கொண்ட பின்னரே கூற முடியும் என கூறியுள்ளார்.

அரசு கல்வி நிலையங்கள் மற்றும் அரசிடம் இருந்து உதவி பெற கூடிய கல்வி நிலையங்கள் ஆகியவற்றில் படிக்க கூடிய 65 சதவீத மாணவ மாணவியருக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு உள்ளன என்றும் அவர் கூறியுள்ளார்.


Next Story