தேசிய செய்திகள்

மேகதாது திட்டத்தை எடியூரப்பா செயல்படுத்த வேண்டும் - டி.கே.சிவக்குமார் + "||" + Eduyurappa should implement Megha Dadu project - DK Sivakumar

மேகதாது திட்டத்தை எடியூரப்பா செயல்படுத்த வேண்டும் - டி.கே.சிவக்குமார்

மேகதாது திட்டத்தை எடியூரப்பா செயல்படுத்த வேண்டும் - டி.கே.சிவக்குமார்
மேகதாது திட்டத்தை எடியூரப்பா செயல்படுத்த வேண்டும் என்று கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் வலியுறுத்தியுள்ளார்.
பெங்களூரு,

கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் பெங்களூருவில் நிருபர்களிடம் கூறியதாவது:-

மண்டியா கே.ஆர்.எஸ்.அணையில் விரிசல் ஏற்பட்டதாக கூறியுள்ள சுமலதா எம்.பி. பற்றி, குமாரசாமி சில கருத்துகளை கூறியுள்ளார். இதனால் அவர்கள் 2 பேருக்கும் இடையே மோதல் உண்டாகி உள்ளது. அவர்கள் பிரச்சினையில் காங்கிரஸ் ஒருபோதும் தலையிடாது. 

அணையில் விரிசல் ஏற்பட்டு இருந்தால் அதுகுறித்து முதல்-மந்திரி எடியூரப்பா, மந்திரிகள், நீர்ப்பாசனத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்துவார்கள். நாங்கள் ஏதாவது கருத்து கூறி மக்களை கஷ்டப்படுத்த விரும்பவில்லை. 

சுமலதா-குமாரசாமி பிரச்சினையில் மத்தியஸ்தம் செய்வது காங்கிரஸ் வேலை அல்ல. எங்களுக்கு வேறு வேலை உள்ளது. மேகதாது திட்டத்தை எடியூரப்பா செயல்படுத்த வேண்டும். அரசு சரியாக செயல்படாத போது நாங்கள் அறிவுரை கூறுவோம். இதுதான் எங்கள் வேலை.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. மேகதாது திட்டத்தை நிறைவேற்றுவது குறித்து பசவராஜ் பொம்மையை சந்தித்து பேசுவேன்: குமாரசாமி
மேகதாது திட்டத்தை நிறைவேற்றுவதற்காக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மையை சந்தித்து பேசுவேன் என்று குமாரசாமி தெரிவித்துள்ளார்.
2. மேகதாது திட்டம்: குடிநீர் திட்டத்தை செயல்படுத்த தமிழகத்தின் அனுமதி தேவை இல்லை; பசவராஜ் பொம்மை பேட்டி
மேகதாது திட்டத்தில் குடிநீர் திட்டத்தை செயல்படுத்த அண்டை மாநிலங்களின் அனுமதி தேவை இல்லை என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கூறினார்.
3. ஊழல் அதிகரித்ததால் எடியூரப்பா நீக்கப்பட்டார் - எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா
ஊழல் அதிகரித்ததால் எடியூரப்பா நீக்கப்பட்டதாக எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.
4. எடியூரப்பா பதவி விலகியது குறித்து கருத்து கூற விரும்பவில்லை: தேவேகவுடா
எடியூருப்பா பதவி விலகியது குறித்து கருத்து கூற விரும்பவில்லை என்று முன்னாள் பிரதமர் தேவேகவுடா தெரிவித்துள்ளார்.
5. கர்நாடக புதிய முதல் மந்திரி யார்? இன்று மாலை 5 மணிக்கு பாஜக ஆலோசனை
கர்நாடக முதல்-மந்திரி பதவியை எடியூரப்பா நேற்று ராஜினாமா செய்தார். அரசின் 2 ஆண்டுகள் சாதனை விழா மேடையிலேயே கண்ணீர் சிந்தியபடி இதனை அவர் அறிவித்தார்.