தேசிய செய்திகள்

பிரதமர் மோடி தலைமையில் வரும் 14-ம் தேதி மத்திய மந்திரி சபை கூட்டம் + "||" + PM Narendra Modi to chair Council of Ministers meeting on 14th July

பிரதமர் மோடி தலைமையில் வரும் 14-ம் தேதி மத்திய மந்திரி சபை கூட்டம்

பிரதமர் மோடி தலைமையில் வரும் 14-ம் தேதி மத்திய மந்திரி சபை கூட்டம்
பிரதமர் மோடி தலைமையில் வரும் 14-ம் தேதி மத்திய மந்திரி சபை கூட்டம் நடைபெற உள்ளது.
புதுடெல்லி,

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய மந்திரி சபையில் மிகப்பெரிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. மத்திய மந்திரி சபை கடந்த 7 ந்தேதி அதிரடியாக மாற்றி அமைக்கப்பட்டது. அதில் புதிதாக 43 பேர் பதவி ஏற்றுக்கொண்டனர்.

மூத்த மந்திரிகள் 12 பேர் ராஜினாமா செய்ததோடு, புதிதாக 43 பேர் கேபினட் மந்திரிகளாகவும்,  இணை மந்திரிகளாகவும் பதவியேற்று  கொண்டனர். அமைச்சரவையில் மொத்தம் 15 கேபினட் மந்திரிகள் சேர்க்கப்பட்டனர், 28 பேருக்கு இணை மந்திரி பதவி வழங்கப்பட்டு உள்ளது. இதனால், பிரதமர் நரேந்திர மோடியின் மந்திரி சபையில்  உள்ள மந்திரிகளின் எண்ணிக்கை 78 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில், பிரதமர் மோடி தலைமையில் வரும் 14-ம் தேதி (புதன்கிழமை) மத்திய மந்திரி சபை கூட்டம் நடைபெற உள்ளது. மந்திரி சபை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில் 14-ம் கூட உள்ள மத்திய மந்திரி சபை கூட்டம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருத்தப்படுகிறது. 

முன்னதாக, மந்திரி சபையில் புதிதாக இடம்பெற்றுள்ள மந்திரிகளுக்கு பிரதமர் மோடி பல்வேறு ஆலோசனைகளை வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 


தொடர்புடைய செய்திகள்

1. ஆத்ம நிர்பார் பாரத் - பிரதமர் இன்று உரை
ஆத்ம நிர்பார் பாரத் சுவயம்பூர்ணா' திட்டத்தின் பிரதமர் மோடி காணொலி வாயிலாக உரையாற்றுகிறார்.
2. 100 கோடி தடுப்பூசி சாதனை: புதிய இந்தியாவின் விடா முயற்சி, நம்பிக்கைக்கு கிடைத்த வெற்றி - பிரதமர் மோடி
இந்தியாவில் 100 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டது, வரலாற்றின் புதிய அத்தியாயம் என பிரதமர் மோடி கூறினார்.
3. பிரதமர் மோடிக்கு பகவத் கீதை புத்தகத்தை பரிசளித்த நமல் ராஜபக்சே
சிங்கள மொழியில் எழுதப்பட்ட பகவத் கீதை புத்தகத்தை பிரதமர் மோடிக்கு நமல் ராஜபக்சே பரிசளித்தார்.
4. ஊழலை ஒழிக்க தொடர் முயற்சி செய்து வருகிறேன் - பிரதமர் மோடி
தேச நலனை மனதில் கொண்டு அதிகாரிகள் ஊழலை ஒழிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி வலியுறுத்தினார்.
5. கேரளாவில் பெய்து வரும் கனமழை, நிலச்சரிவால் பலர் உயிரிழந்த நிகழ்வு வேதனை அளிக்கிறது - பிரதமர் மோடி
கேரளாவில் பெய்து வரும் கனமழை, நிலச்சரிவால் பலர் உயிரிழந்த நிகழ்வு வேதனை அளிக்கிறது என பிரதமர் மோடி கூறியுள்ளார்.