தேசிய செய்திகள்

பிரதமர் மோடியுடன் உத்தரகாண்ட் முதல்-மந்திரி சந்திப்பு + "||" + Uttarakhand CM Pushkar Singh Dhami called on Prime Minister Narendra Modi today

பிரதமர் மோடியுடன் உத்தரகாண்ட் முதல்-மந்திரி சந்திப்பு

பிரதமர் மோடியுடன் உத்தரகாண்ட் முதல்-மந்திரி சந்திப்பு
உத்தரகாண்ட் மாநிலத்தின் புதிய முதல்-மந்திரியாக புஷ்கர் சிங் தாமி பதவியேற்றுள்ளார்.
புதுடெல்லி,

உத்தரகாண்ட் மாநில முதல்-மந்திரியாக இருந்த தீரத்சிங் ராவத் பதவியேற்று ஆறு மாதத்தில் சட்டமன்ற உறுப்பினராக தேர்வாக முடியாத சூழல் ஏற்பட்டதால், அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். 

இதையடுத்து, டேராடூனில் கடந்த 3-ம் தேதி நடந்த பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் பா.ஜ.க. சட்டமன்றக் கட்சித் தலைவராகவும், புதிய முதல்-அமைச்சராகவும் புஷ்கர் சிங் தாமி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.

அதை தொடர்ந்து, உத்தரகாண்ட் மாநிலத்தின் புதிய முதல்-அமைச்சராக புஷ்கர் சிங் தாமி கடந்த 4-ம் தேதி பதவியேற்றார். அவருக்கு உத்தரகாண்ட் மாநில கவர்னர் பேபி ராணி மௌரியா பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். முதல்-மந்திரி புஷ்கர் சிங் தாமியை தொடர்ந்து, புதிய அமைச்சரவையும் பதவியேற்றுக் கொண்டது. 

இந்நிலையில், உத்தரகாண்ட் மாநிலத்தின் புதிய முதல்-அமைச்சராக பொறுப்பேற்றுள்ள புஷ்கர் சிங் தாமி பிரதமர் மோடியை இன்று டெல்லியில் சந்தித்தார். இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமாக நடைபெற்றதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தொடர்புடைய செய்திகள்

1. பிரதமர் மோடி வரும் 29 ஆம் தேதி இத்தாலி பயணம்
ஜி 20 மாநாடுகளின் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி வரும் 29 ஆம் தேதி இத்தாலி பயணம் மேற்கொள்கிறார்.
2. பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங்குடன் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி சந்திப்பு
டெல்லியில் நேற்று பிரதமர் மோடியை ஆர்.என். ரவி சந்தித்து பேசியிருந்தார்.
3. மன் கி பாத்: புதிய ஆற்றலுடன் இந்தியா முன்னேறி வருகிறது - பிரதமர் மோடி
100 கோடி தடுப்பூசிகளை செலுத்தி புதிய ஆற்றலுடன் இந்தியா முன்னேறி வருகிறது என பிரதமர் மோடி கூறினார்.
4. பிரதமர் மோடியுடன் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி சந்திப்பு
தமிழக கவர்னராக பொறுப்பேற்ற பிறகு பிரதமர் மோடியை கவர்னர் ஆர்.என்.ரவி சந்தித்து இருப்பது இதுவே முதல் முறையாகும்.
5. ஆத்ம நிர்பார் பாரத் - பிரதமர் இன்று உரை
ஆத்ம நிர்பார் பாரத் சுவயம்பூர்ணா' திட்டத்தின் பிரதமர் மோடி காணொலி வாயிலாக உரையாற்றுகிறார்.