புதுச்சேரியில் இலவச கல்வி திட்டத்தை விரைவில் அமல்படுத்த வேண்டும்: தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய துணை தலைவர்


புதுச்சேரியில் இலவச கல்வி திட்டத்தை விரைவில் அமல்படுத்த வேண்டும்: தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய துணை தலைவர்
x
தினத்தந்தி 12 July 2021 12:10 AM GMT (Updated: 12 July 2021 12:12 AM GMT)

தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் துணை தலைவர் அருண் ஹால்டர் புதுவை வந்தார். அவருடன் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் தமிழ்நாடு இயக்குனர் சுனில்குமார்பாபு, முதுநிலை ஆய்வாளர் லிஸ்டர், ஆலோசகர் ராமசாமி ஆகியோர் வந்தனர்.

அவர்கள் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், முதல்-அமைச்சர் ரங்கசாமி ஆகியோரை மரியாதை நிமித்தமாக சந்தித்தனர். அதைத்தொடர்ந்து தலைமை செயலகத்தில் தலைமை செயலர் அஸ்வனிகுமார், கூடுதல் போலீஸ் டி.ஜி.பி. ஆனந்தமோகன் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் ஆன்லைனில் புகார் அளிக்கும் வசதி ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இதில் மேற்கு வங்காளத்தில் இதுவரை 4,220 புகார்கள் பதிவாகி உள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கு தீர்வு தொகை உடனே வழங்க வேண்டும். தாழ்த்தப்பட்ட மாணவர்கள் பலர் கல்வி உதவித்தொகை விண்ணப்பிக்காமல் உள்ளனர். அவர்கள் பதிவு செய்து கல்வி உதவித்தொகை 
சுலபமாக பெற முடியும். புதுவை மாநிலத்தில் 1-ம் வகுப்பு முதல் முதுநிலை படிப்பு வரை பயிலும் தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மாணவர்களுக்கு இலவச கல்வி வழங்கும் திட்டத்தை விரைவில் அமல் படுத்த வேண்டும் என அறிவுறுத்தியுள்ளேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story