கர்நாடகாவில் கல்லூரிகளை திறக்க தயாராகி வருகிறோம் - துணை முதல்-மந்திரி அஸ்வத் நாராயண்


கர்நாடகாவில் கல்லூரிகளை திறக்க தயாராகி வருகிறோம் - துணை முதல்-மந்திரி அஸ்வத் நாராயண்
x
தினத்தந்தி 12 July 2021 7:51 AM GMT (Updated: 12 July 2021 7:51 AM GMT)

கர்நாடகாவில் கல்லூரிகளை திறக்க தயாராகி வருகிறோம் என்று அம்மாநில துணை முதல்-மந்திரி அஸ்வத் நாராயண் கூறினார்.

பெங்களூரு,

கர்நாடகத்தில் கொரோனா 2-வது அலை காரணமாக நடப்பு ஆண்டில் இதுவரை பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படவில்லை. இதனால் ஆன்-லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. 

இந்த நிலையில் கர்நாடகத்தில் இந்த மாத தொடக்கத்தில் இருந்து கொரோனா பரவல் மெல்ல மெல்ல குறைந்து வருகிறது. கொரோனா குறைந்ததையடுத்து மாநிலத்தில் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் மாநிலத்தில் பள்ளி, கல்லூரிகளை திறப்பதற்கான நடவடிக்கைகளை அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், கர்நாடகாவில் கல்லூரிகள் திறப்பு குறித்து அம்மாநில துணை முதல்-மந்திரி அஸ்வத் நாராயண் கூறுகையில், 

கர்நாடகாவில் அந்தந்த பல்கலைக்கழகங்களின் அட்டவணைப்படி தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. மாநிலத்தில் தடுப்பூசி போட மாணவர்களை அழைக்கும் வகையில் தடுப்பூசி செலுத்தும் பணி நடந்து வருகிறது, மேலும் கொரோனா பரவலை கருத்தில் கொண்டு கல்லூரிகளை திறக்க தயாராகி வருகிறோம் என்று கூறினார்.

Next Story