தேசிய செய்திகள்

மேகதாது அணை கட்டியே தீருவோம்: கர்நாடக உள்துறை அமைச்சர் சொல்கிறார் + "||" + Karnataka HM on Tamil Nadu all-party meet resolution over Mekedatu Project

மேகதாது அணை கட்டியே தீருவோம்: கர்நாடக உள்துறை அமைச்சர் சொல்கிறார்

மேகதாது அணை கட்டியே தீருவோம்: கர்நாடக உள்துறை அமைச்சர் சொல்கிறார்
மேகதாது அணை கட்டுமான பணியை நிறுத்தும் பேச்சுக்கே இடம் இல்லை என்று கர்நாடக உள்துறை மந்திரி தெரிவித்துள்ளார்.
பெங்களூரு,

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் அணை கட்டுவதற்கு கர்நாடக அரசு மேற்கொண்டுவரும் முயற்சிகள் தொடர்பாக, சட்டப்பூர்வமான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருகிறது.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினும், பிரதமர் நரேந்திரமோடியை நேரில் சந்தித்து மேகதாது அணை பிரச்சினை குறித்து தமிழ்நாட்டின் நிலைபாட்டை விளக்கி, நமது மாநில விவசாயிகளின் நலன் காக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். 

மேகதாது அணை விவகாரம் தொடர்பாக தமிழக அரசு இன்று அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டியது. இந்த கூட்டத்தில்  மேகதாது திட்டத்துக்கு மத்திய அரசு எந்த அனுமதியும் வழங்கக் கூடாது  தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த நிலையில், கர்நாடக உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- மேகதாது அணை கட்டுமான பணியை நிறுத்தும் பேச்சுக்கே இடம் இல்லை. குடிநீர்  விவகாரம் முக்கியமானது என்பதால்  அணை கட்டுவதற்கும் மக்களின் நலனை பாதுகாக்கவும்  மேகதாதுவில் அணை கட்ட கர்நடகாவிற்கு உரிமை உள்ளது. 

குழப்பத்தை ஏற்படுத்தும் நோக்கத்தில் உச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்துள்ளது. கர்நாடகாவில் கோரிக்கையை மத்திய அரசு சட்ட ரீதியாக பரிசீலிக்கும். பிரச்சினைகளை காவிரி தீர்ப்பாயம் தீர்த்து வைத்ததால்  மேகதாது அணையை நிறுத்த எந்த காரணமும் இல்லை” என்றார். 


தொடர்புடைய செய்திகள்

1. மேகதாது அணை விவகாரம்: தமிழக அரசின் மேல்முறையீடு - சுப்ரீம் கோர்ட்டில் 24-ந் தேதி விசாரணை
பசுமை தீர்ப்பாய உத்தரவுக்கு எதிராக தமிழக அரசின் மேல்முறையீட்டு வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் 24-ந் தேதி விசாரணைக்கு வர உள்ளது.
2. அக்டோபர் 2ஆம் தேதி கிராம சபை கூட்டம் நடத்த தமிழக அரசு அனுமதி
அக்டோபர் 2 ஆம் தேதி கிராம சபைக் கூட்டம் நடத்த தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
3. சசிகலாவுக்கு எதிரான வழக்கில் கர்நாடக அரசுக்கு ஐகோர்ட்டு கெடு
பெங்களூரு சிறையில் சசிகலாவுக்கு சொகுசு வசதிகள் செய்து கொடுக்க ரூ.2 கோடி லஞ்சம் வாங்கிய வழக்கில் சிறைத்துறை அதிகாரிகள் இருவர் மீதும் 4 வாரத்திற்குள் நடவடிக்கை எடுக்கும்படி கர்நாடக அரசுக்கு ஐகோர்ட்டு கெடு விதித்துள்ளது.
4. மேகதாது திட்டத்தை தமிழக அரசு தேவையின்றி எதிர்க்கிறது - மந்திரி கோவிந்த் கார்ஜோள்
மேகதாது திட்டத்தை தமிழக அரசு தேவையின்றி எதிர்ப்பதாக மந்திரி கோவிந்த் கார்ஜோள் தெரிவித்துள்ளார்.
5. மேகதாது அணை: காவிரி நதிநீர் ஆலோசனை கூட்டத்தில் தமிழகம், புதுச்சேரி அரசுகள் கடும் எதிர்ப்பு
மேகதாதுவில் அணை கட்டும் நடவடிக்கைக்கு காவிரி நதிநீர் ஆலோசனை கூட்டத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரி அரசுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.