ஒலிம்பிக் போட்டிகளுக்கு செல்லும் இந்திய வீரர்களுடன் பிரதமர் மோடி இன்று கலந்துரையாடல்


ஒலிம்பிக் போட்டிகளுக்கு செல்லும் இந்திய வீரர்களுடன் பிரதமர் மோடி இன்று கலந்துரையாடல்
x
தினத்தந்தி 13 July 2021 3:50 AM GMT (Updated: 13 July 2021 3:50 AM GMT)

இந்தியாவில் இருந்து 18 விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க மொத்தம் 126 வீரர்கள் டோக்கியோ செல்ல உள்ளனர்.

புதுடெல்லி,

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கச் செல்லும் இந்திய விளையாட்டு வீரர்கள் குழுவினருடன் பிரதமர் மோடி நரேந்திர மோடி இன்று ( செவ்வாய்க்கிழமை) கலந்துரையாடுகிறார். 

மாலை 5 மணிக்கு நடைபெறும் இந்த கலந்துரையாடல் காணொலி வாயிலாக நடக்கிறது.  போட்டிகளுக்கு முன்னதாக வீரர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் பிரதமரின் இந்தக் கலந்துரையாடல் அமையும் எனத்தெரிகிறது. 

இந்தக் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சர் அனுராக் தாகூர், இணை அமைச்சர் நிசித் பிரமனிக், சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு ஆகியோரும் கலந்து கொள்கின்றனர். 

இந்தியாவில் இருந்து 18 விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க மொத்தம் 126 வீரர்கள் டோக்கியோ செல்வார்கள். இது, ஒலிம்பிக் போட்டிகளுக்குச் செல்லும் மிகப் பெரிய இந்திய குழுவாகும். 18 விளையாட்டுகளை உள்ளடக்கிய மொத்தம் 69 போட்டிகளில் இந்தியா பங்கேற்பதும் இதுவே முதல்முறையாகும்.


Next Story