கேரளாவில் கூடுதல் தளர்வுகள்- கடைகள் திறக்கும் நேரம் அதிகரிப்பு


Photo Credit: PTI
x
Photo Credit: PTI
தினத்தந்தி 13 July 2021 1:11 PM GMT (Updated: 13 July 2021 1:11 PM GMT)

கேரளாவில் கொரோனா தொற்று பாதிப்பு தொடர்ந்து அதிகமாக உள்ளது.

திருவனந்தபுரம், 

நாட்டில் பெரும்பாலான மாநிலங்களில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் கட்டுக்குள் வந்துள்ளது. ஆனால், கேரளாவில் கொரோனா 2-வது அலை பரவல் இன்னும் கட்டுக்குள் வந்தபாடில்லை. நாட்டிலேயே தினசரி கொரோனா பாதிப்பு அதிகம் பதிவாகும் மாநிலமாக கேரளாதான் தற்போது உள்ளது. 

இந்த நிலையில்,  கேரளத்தில் கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.  பொதுநிகழ்ச்சிகள் மற்றும் கடைகள் திறந்திருக்கும் நேரத்தை இரவு 8 மணி வரை நீட்டித்து, வங்கிகள் வாரத்தில் 5 நாள்கள் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வார இறுதி நாட்களில் ஊரடங்கு தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  மற்ற நாள்களில் அனைத்து வகையான கடைகள் மற்றும் தொழில்களும் கொரோனா  நெறிமுறைகளுக்கு உட்பட்டு செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.


Next Story