மேகதாது திட்டத்தால் தமிழகத்திற்கான காவிரி நீர் குறைக்கப்படாது - கர்நாடக சுகாதாரத்துறை மந்திரி சுதாகர்


மேகதாது திட்டத்தால் தமிழகத்திற்கான காவிரி நீர் குறைக்கப்படாது - கர்நாடக சுகாதாரத்துறை மந்திரி சுதாகர்
x
தினத்தந்தி 13 July 2021 7:17 PM GMT (Updated: 13 July 2021 7:17 PM GMT)

மேகதாது திட்டத்தால் தமிழகத்திற்கான காவிரி நீர் குறைக்கப்படாது என கர்நாடக சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் தெரிவித்துள்ளார்.

சிக்பள்ளாப்பூா்,

கர்நாடக அரசு மேகதாது அணை கட்டுவதற்கான நடவடடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதற்கு தமிழக அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்த நிலையில் கர்நாடக சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் சிக்பள்ளாப்பூரில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது;-

“தமிழ்நாட்டிற்கு காவிரி நீர் வழங்குவதில் எந்த பிரச்சினையும் இல்லை. ஆண்டுதோறும் நடுவர் மன்ற தீர்ப்பின்படி தமிழ்நாட்டிற்கு காவிரி நீர் திறக்கப்படுகிறது. மழை அதிகமாக பெய்யும் நேரத்தில் கூடுதலாகவும் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. மேகதாது திட்டத்தால் தமிழகத்திற்கு வழங்கப்படும் காவிரி நீர் குறைக்கப்படாது.

பெங்களூரு, ராமநகர், சிக்பள்ளாப்பூர் ஆகிய மாவட்டங்களுக்கு குடிநீர் கொடுப்பதால் தமிழகத்திற்கு எந்த சிக்கலும் கிடையாது. தமிழ்நாட்டின் முடிவுக்கு கண்டனம் தெரிவிக்கிறேன். தமிழ்நாடு அரசின் நடவடிக்கையால் இரு மாநிலங்களுக்கும் இடையேயான நல்லுறவு பாதிக்கப்படுகிறது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சகோதரத்துவ உணர்வுடன் இந்த பிரச்சினையை அணுக வேண்டும். இரு மாநிலங்களும் ஒரே நாட்டில் தான் உள்ளன. அந்த மனப்பான்மையுடன் தமிழகம் நடந்துகொள்ள வேண்டும்.”

இவ்வாறு மந்திரி சுதாகர் கூறியுள்ளார்.

Next Story