மின்னணு கல்வி முறைகள் மேலும் வலுப்படுத்தப்படும் - மத்திய கல்வி மந்திரி தகவல்


மின்னணு கல்வி முறைகள் மேலும் வலுப்படுத்தப்படும் - மத்திய கல்வி மந்திரி தகவல்
x
தினத்தந்தி 14 July 2021 12:03 AM GMT (Updated: 14 July 2021 12:03 AM GMT)

கொரோனா காலத்தில் தொடங்கப்பட்ட மின்னணு கல்வி முறைகள் மேலும் வலுப்படுத்தப்படும் மத்திய கல்வி மந்திரி தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

கொரோனா காலத்தில் கல்வி கற்பிப்பதற்காக, பி.எம். இ-வித்யா, தேசிய மின்னணு கல்வி கட்டமைப்பு போன்ற மின்னணு முயற்சிகள் பின்பற்றப்பட்டன. இவற்றின் முன்னேற்றம் குறித்து மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் நேற்று ஆய்வு செய்தார். இதன் பிறகு செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:-

“கொரோனா பரவல் காரணமாக, மின்னணு கல்வி முறைக்கு மாற வேண்டியதாகி விட்டது. இந்த கல்வி முறைகள் மேலும் வலுப்படுத்தப்படும். நிறுவனமயமாக்கப்படும். துடிப்பான மின்னணு கல்வி முறைகள், மாணவர்களுக்கு கற்பதற்கான வாய்ப்புகளை விரிவுபடுத்தும்.”

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story