நந்திகிராம் தொகுதியில் மறுவாக்கு எண்ணிக்கை கோரிய வழக்கு; ஆக.12 ஆம் தேதிக்கு விசாரணை ஒத்திவைப்பு


நந்திகிராம் தொகுதியில் மறுவாக்கு எண்ணிக்கை கோரிய வழக்கு; ஆக.12 ஆம் தேதிக்கு விசாரணை ஒத்திவைப்பு
x
தினத்தந்தி 14 July 2021 1:20 PM GMT (Updated: 14 July 2021 1:20 PM GMT)

நந்திகிராம் தொகுதியில் பயன்படுத்தப்பட்ட மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், ஒப்புகை சீட்டுகளை பாதுகாப்பாக வைக்க வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

கொல்கத்தா,

மேற்கு வங்க மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தோ்தலில் நந்திகிராம் தொகுதியில் முதல்-மந்திரி  மம்தா பானா்ஜியை எதிா்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளா் சுவேந்து அதிகாரி வெற்றி பெற்றாா். வாக்கு எண்ணிக்கையின்போது மம்தா பானா்ஜி தொடா்ந்து முன்னிலை பெற்றுவந்த நிலையில், இறுதிச் சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில் சுவேந்து அதிகாரி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

இதில் சந்தேகம் தெரிவித்த மம்தா பானா்ஜி, சுவேந்து அதிகாரி வெற்றிக்கு எதிராக கொல்கத்தா உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.  இந்த வழக்கு கொல்கத்தா நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.  

அப்போது, சுவேந்து அதிகாரி பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பிய நீதிமன்றம், இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை ஆகஸ்ட் 12ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.  மேலும்,  நந்திகிராம் தொகுதியில் பயன்படுத்தப்பட்ட மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், ஒப்புகை சீட்டுகளை பாதுகாப்பாக வைக்க வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டது. 


Next Story