தேசிய செய்திகள்

ரஷியாவின் ‘ஸ்புட்னிக் லைட்’ தடுப்பூசி விரைவில் இந்தியாவில் அறிமுகமாகும் - ரஷிய தூதர் தகவல் + "||" + Sputnik Light COVID vaccine expected to be launched in India soon

ரஷியாவின் ‘ஸ்புட்னிக் லைட்’ தடுப்பூசி விரைவில் இந்தியாவில் அறிமுகமாகும் - ரஷிய தூதர் தகவல்

ரஷியாவின் ‘ஸ்புட்னிக் லைட்’ தடுப்பூசி விரைவில் இந்தியாவில் அறிமுகமாகும் - ரஷிய தூதர் தகவல்
ரஷியாவின் ‘ஸ்புட்னிக் லைட்’ கொரோனா தடுப்பூசி விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்று இந்தியாவுக்கான ரஷிய தூதர் நிகோலாய் குடஷேவ் தெரிவித்தார்
புதுடெல்லி,

இந்தியாவுக்கான ரஷிய தூதர் நிகோலாய் குடஷேவ் டெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

வருடாந்திர உச்சி மாநாட்டுக்காக ரஷிய ஜனாதிபதி விளாடிமிர் புடின் இந்தியாவுக்கு வருவது குறித்து இரு தரப்பும் பேசிவருகின்றன. ஆனால் கொரோனா தொற்று சூழ்நிலையை முக்கியமாக கருத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது. இந்திய-ரஷிய பன்முக உறவை மேலும் வளர்ப்பதன் அவசியத்தை இரு தரப்புமே மீண்டும் ஒருமுறை வலியுறுத்தியுள்ளன. இரு நாடுகளுக்கு இடையிலான உறவுக்கு வானமே எல்லை.

ரஷியாவின் ‘ஸ்புட்னிக் லைட்’ கொரோனா தடுப்பூசி விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும். இந்தியாவில் தற்போது தடுப்பூசி செலுத்தும் பணியில் ரஷியாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசி பயன்படுத்தப்படுவதும், அது தொடர்பான ஒத்துழைப்பு அதிகரிப்பதும் பெருமை அளிக்கிறது. கொரோனா சான்றிதழ்களுக்கு இரு நாட்டு பரஸ்பர அங்கீகாரம் குறித்து தொடர்ந்து பேசுவதிலும் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. ரஷியாவில் நடுவானில் ராணுவ விமானத்தில் தீ; தரையில் விழுந்து வெடித்து சிதறியது; 3 பேர் பலி
ரஷிய தலைநகர் மாஸ்கோவில் உள்ள குபின்கா என்ற நகருக்கு அருகே நேற்று காலை அந்த நாட்டு விமான‌ படைக்கு சொந்தமான ‘ஐஎல்-112 வி' ரக விமானம் ஒன்று பறந்து கொண்டிருந்தது. அந்த விமானத்தில் 3 பேர் இருந்ததாக கூறப்படுகிறது.
2. ரஷியாவில் சுற்றுலா ஹெலிகாப்டர் ஏரியில் விழுந்து மூழ்கியது; 8 பேர் பலி
ரஷிய நாட்டில் கம்சாத்கா தீபகற்பத்தில் உள்ள குரில் ஏரியில் நேற்று ஒரு சுற்றுலா ஹெலிகாப்டர் விழுந்து மூழ்கியது. இந்த ஹெலிகாப்டரில் 16 சுற்றுலா பயணிகளும், சிப்பந்திகளும் பயணித்ததாக தகவல்கள் கூறுகின்றன.
3. ரஷியாவின் ஸ்புட்னிக்-வி தடுப்பூசியின் ஒற்றை ‘டோஸ்’ நல்ல பலன் தருகிறது - ஆய்வுத்தகவல்
ரஷியாவின் ஸ்புட்னிக்-வி தடுப்பூசியின் ஒற்றை டோஸ் நல்ல பலன் தருகிறது என்று ஆய்வுத்தகவல் கூறுகின்றன.
4. ரஷியாவின் கம்சாட்கா தீபகற்பத்தில் திடீர் நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 5.4 ஆக பதிவு
ரஷியாவின் கம்சாட்கா தீபகற்பத்தில் ஏற்பட்ட திடீர் நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 5.4 ஆக பதிவானது.
5. ரஷியாவில் 28 பேருடன் மாயமான விமானம் மலையில் மோதி நொறுங்கியது; 19 உடல்கள் மீட்பு
ரஷியாவின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள பெட்ரோபாவ்-கம்சாட்ஸ்கி நகரிலிருந்து பலானா நகரை நோக்கி ‘ஆன்டனோவ் ஆன்-26' ரக பயணிகள் விமானம் நேற்றுமுன்தினம் புறப்பட்டது. அந்த விமானத்தில் பலானா நகர மேயர் ஓல்கா மொகிரோ உள்பட 22 பயணிகளும் 6 சிப்பந்திகளும் இருந்தனா்.