டெல்லியில் பள்ளிக்கூடங்களை திறக்கும் திட்டம் இல்லை: அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 15 July 2021 8:03 PM GMT (Updated: 15 July 2021 8:03 PM GMT)

டெல்லியில் பள்ளிக்கூடங்களை திறக்கும் திட்டம் இல்லை என்று அம்மாநில முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி, 

கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதால் தலைநகர் டெல்லியில் பள்ளிக்கூடங்கள் அனைத்தும் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் மூடப்பட்டுள்ளன. மேல்நிலை வகுப்புகள் மட்டும் திறக்கப்பட்டு செய்முறை தேர்வுகள் நடத்தப்பட்டன. பின்னர் 2-வது அலை பரவியதால் அந்த வகுப்புகளும் மூடப்பட்டன.

தொற்று குறைந்து வரும் நிலையில் மீண்டும் பள்ளிக்கூடங்கள் திறக்கப்படுமா? என்ற கேள்விக்கு பதில் அளித்த முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால், ‘உலகின் சில நாடுகளில் 3-வது அலை பரவி வருகிறது. மாணவ, மாணவிகளின் உயிரோடு விளையாட நாங்கள் விரும்பவில்லை. முதலில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போட்டு முடிக்க வேண்டும். எனவே தற்போதைய சூழ்நிலையில் பள்ளிக்கூடங்களை திறக்கும் திட்டம் எதுவும் இல்லை’ என்று தெரிவித்தார்.


Next Story