தேசிய செய்திகள்

மத்திய பிரதேசத்தில் கிணற்றில் விழுந்த கிராம மக்கள் - மீட்கும் பணிகள் தீவிரம் + "||" + Villagers who fell into a well in Madhya Pradesh rescue operations underway

மத்திய பிரதேசத்தில் கிணற்றில் விழுந்த கிராம மக்கள் - மீட்கும் பணிகள் தீவிரம்

மத்திய பிரதேசத்தில் கிணற்றில் விழுந்த கிராம மக்கள் - மீட்கும் பணிகள் தீவிரம்
குழந்தையை காப்பாற்ற முயன்று கிணற்றில் விழுந்த கிராம மக்களை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
போபால்,

மத்திய பிரதேச மாநிலம் விதிஷா மாவட்டத்தில் உள்ள கஞ்ச்பசோதா என்ற கிராமத்தில் குழந்தை ஒன்று கிணற்றில் தவறி விழுந்துள்ளது. அந்த குழந்தையை காப்பாற்றுவதற்காக கிராம மக்கள் கிணற்றின் அருகில் திரண்டு வந்துள்ளனர். 

அப்போது கிணற்றின் சுற்றுச்சுவரில் அதிக பாரம் ஏற்பட்டதால், அது இடிந்து விழுந்துள்ளது. இதனால் கிணற்றை ஒட்டி நின்று கொண்டிருந்த சுமார் 30 பேர் கிணற்றுக்குள் விழுந்ததாக கூறப்படுகிறது. இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக மாநில மற்றும் தேசிய பேரிடர் மீட்புக் குழிவினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு வந்ததும் மீட்புப் பணிகள் முடுக்கி விடப்பட்டன. கிணற்றில் இருந்து காயமடைந்த நிலையில் பலர் மீட்கப்பட்ட நிலையில், 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் கிணற்றுக்குள் சிக்கியிருக்கும் 15 பேரை மீட்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. அதே சமயம் காயமடைந்தவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் குறித்து மத்திய பிரதேச முதல் மந்திரி சிவராஜ் சவுகான், தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதாகவும், தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. மத்திய பிரதேசத்தில் 30 ராணுவ வீரர்களுக்கு கொரோனா
மத்திய பிரதேசத்தில் ராணுவ வீரர்கள் 30 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
2. மத்திய பிரதேசத்தில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை நாளை பள்ளிகள் திறப்பு
மத்திய பிரதேசத்தில் 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நாளை பள்ளிகள் திறக்கப்படுகிறது.
3. மத்திய பிரதேசத்தில் மின்சாரம் தாக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் சாவு
மத்திய பிரதேசத்தில் மின்சாரம் தாக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
4. மத்திய பிரதேசத்தில் ரூ.5 கோடி கள்ள நோட்டுகள் பறிமுதல் - 8 பேர் கைது
மத்திய பிரதேசத்தில் மிகப்பெரிய அளவுக்கு கள்ள நோட்டுகள் சிக்கியிருக்கும் விவகாரம் மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
5. மத்திய பிரதேசத்தில் கொரோனா வார்டில் பணிபுரிந்த இளம் டாக்டர்கள் போராட்டம்
மத்திய பிரதேசத்தில் கொரோனா வார்டில் பணிபுரிந்த இளம் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.