கேரளாவில் ஓணம் பண்டிகையையொட்டி ரேஷன் கார்டுதாரர்களுக்கு 17 பொருட்கள் அடங்கிய இலவச தொகுப்பு


கேரளாவில் ஓணம் பண்டிகையையொட்டி ரேஷன் கார்டுதாரர்களுக்கு 17 பொருட்கள் அடங்கிய இலவச தொகுப்பு
x
தினத்தந்தி 16 July 2021 4:37 AM GMT (Updated: 2021-07-16T10:07:24+05:30)

கேரளாவில் ஓணம் பண்டிகையையொட்டி ரேஷன் கார்டுதாரர்களுக்கு 17 பொருட்கள் அடங்கிய இலவச தொகுப்பு

பாலக்காடு, 

கேரளாவில் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 23-ந் தேதி ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி ரேஷன் கார்டு தாரர்களுக்கு இலவச ஓணப்பையை இம்முறையும் வழங்க அரசு முடிவு செய்துள்ளது. இதுகுறித்து மந்திரி ஜி.ஆர்.அணில் கூறியதாவது:-

ஓணத்தையொட்டி ரேஷன் கார்டுதாரர்களுக்கு 17 வகை உணவு பொருட்கள் அடங்கிய இலவச ஓணப்பைகள் வழங்கப்படும். இந்த பையில், பாயசம் தயாரிக்க முந்திரி பருப்பு, ஏலக்காய், சேமியா அல்லது பாலாடை அல்லது உலர் அரிசி, நெய். இதுதவிர அத்தியாவசிய பொருட்களான சா்க்கரை, தேங்காய் எண்ணெய், பச்சைப்பயறு, துவரம்பருப்பு, தேயிலை, மிளகாய் அல்லது மிளகாய்த்தூள், உப்பு, மஞ்சள், கோதுமை மாவு, வாழைக்காய் வறுவல் அல்லது சர்க்கரை வரட்டி, குளியல் சோப் ஆகிய பொருட்கள் இடம்பெறும். இலவச ஓணப்பை வழங்கும் பணி வருகிற ஆகஸ்டு மாதம் 1-ந் தேதி தொடங்கி, 18-ந் தேதி வரை நடைபெறும். 

இலவச உணவு பையில் தரப்படும் உணவு பொருட்களின் தரமும், அளவும் பரிசோதிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Next Story