கொரோனா 3-ம் அலை வராது எனக்கூற முடியாது - தமிழிசை சௌந்த‌ர‌ராஜன்


கொரோனா 3-ம் அலை வராது எனக்கூற முடியாது - தமிழிசை சௌந்த‌ர‌ராஜன்
x
தினத்தந்தி 16 July 2021 6:10 AM GMT (Updated: 16 July 2021 6:10 AM GMT)

கொரோனா 3-ம் அலை வராது எனக்கூற முடியாது, அனைவரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.

சென்னை,

புதுச்சேரியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது. எனினும், புதுச்சேரி இந்திரா காந்தி அரசு மருத்துவமனையில் 31 குழந்தைகள் கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இந்த நிலையில் புதுச்சேரியில் துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

ஏற்கனவே குழந்தைகளுக்கு கொரோனா ஏற்பட்டது போலவேதான் தற்போதும் பாதிப்பு உள்ளது. குழந்தைகளுக்கான வார்டுகள், ஆக்சிஜன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குழந்தைகளை பாதுகாக்க பெற்றோர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பாதிப்பு இல்லாத வகையில் குழந்தைகள் சிகிச்சை பெற்று சென்று வருகின்றனர். உயிரிழப்பு போன்றவை இல்லாத வகையில் அனைத்து பாதுகாப்பு சிகிச்சை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கொரோனா 3-ம் அலை வராது எனக்கூற முடியாது. ஒருவேளை 3வது அலையில் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்பட்டால் அதனை எதிர்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனவே, அனைவரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். புதுச்சேரியில் ஆகஸ்ட் 15 ஆம் தேதி தேசிய கொடி ஏற்றும் போது, கொரோனா இறக்கப்பட்டிருக்க வேண்டும் என்றார்.

Next Story