பஞ்சாப் அரசியல்: சோனியாகாந்தியுடன் சித்து சந்திப்பு மாநில தலைவராக அறிவிக்க வாய்ப்பு


பஞ்சாப் அரசியல்: சோனியாகாந்தியுடன் சித்து சந்திப்பு மாநில தலைவராக அறிவிக்க வாய்ப்பு
x
தினத்தந்தி 16 July 2021 8:59 AM GMT (Updated: 16 July 2021 8:59 AM GMT)

பஞ்சாப் அரசியல்: சோனியாகாந்தியுடன் சித்து சந்திப்பு காங்கிரஸ் மாநில தலைவராக இன்று மாலை அறிவிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

புதுடெல்லி

பஞ்சாபில் அடுத்தாண்டு சட்டசபை  தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், முதல் மந்திரி  அமரீந்தர் சிங், மூத்த தலைவர் நவ்ஜோத் சிங் சித்து இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது.

இதனால், சித்து ஆம் ஆத்மி கட்சிக்கு மாறவுள்ளதாக கடந்த மாதம் தகவல் வெளியானதி. சமரசப் பேச்சு வார்த்தையை மேற்கொள்ள தேசிய தலைவர்கள் களமிறங்கினர்.

சித்துவுக்கு  ஐந்து மந்திரிகள்  மற்றும் 10-15 எம்.எல்.ஏ.க்கள்  ஆதரவு உள்ளது. மாநில காங்கிரஸ் தலைவராக சித்து நியமிக்கப்படாவிட்டால் இவரகள்  ஏகமனதாக வெளியேறலாம் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையில், சித்து  நியமிக்கப்பட்டால் ஆமரீந்தரை ஆதரிக்கும்  எம்.எல்.ஏ.க்களும் விலக தயாராக உள்ளனர்.

அமரீந்தரை சந்திக்க சண்டிகர் செல்லவிருந்த கட்சி பொதுச் செயலாளர் ஹரிஷ் ராவத்தின் வருகை வியாழக்கிழமை இரவு ரத்து செய்யப்பட்டது.

பஞ்சாப் பேரவைத் தேர்தலில் அடுத்த முதல்-மந்திரி  வேட்பாளராக அமரீந்தரும், மாநில காங்கிரஸ் தலைவராக சித்துவும் நியமனம் செய்ய பேச்சுவார்த்தை நடைபெற்று வந்த நிலையில், இன்று மாலை சித்துவை பஞ்சாப் தலைவராக நியமித்து அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

அது போல் இரண்டு செயற்குழுத் தலைவர்கள், பிரசாரக் குழுத் தலைவர், ஒருங்கிணைப்புக் குழு தலைவர் மற்றும் அறிக்கைக் குழு தலைவர் ஆகியோரின் அறிவிப்புகளும் டெல்லியில் இருந்து ஒரே நேரத்தில் வெளியிடப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில், டெல்லி சென்றுள்ள சித்து சோனியா காந்தியை  அவரது இல்லத்தில் சந்தித்தார். முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் பஞ்சாப் விவகாரங்களுக்கான கட்சி பொறுப்பாளர் ஹரிஷ் ராவத் ஆகியோரும் சித்துடனான சந்திப்பில் கலந்து கொண்டனர்.


Next Story