மேகதாது அணை - மத்திய அரசு துணைபோக கூடாது என வலியுறுத்தினோம் - அமைச்சர் துரைமுருகன்


மேகதாது அணை - மத்திய அரசு துணைபோக கூடாது என வலியுறுத்தினோம் - அமைச்சர் துரைமுருகன்
x
தினத்தந்தி 16 July 2021 9:29 AM GMT (Updated: 16 July 2021 9:29 AM GMT)

காவிரி மேலாண்மை ஆணையத்தின் ஒப்புதல் இல்லாமல் எந்த திட்டத்திற்கும் அனுமதி வழங்கப்படாது என தமிழக அனைத்துக்கட்சி குழுவினரிடம் மத்திய நீர்வளத் துறைமந்திரி ஷெகாவத் உறுதி அளித்துள்ளார்.

புதுடெல்லி,

மேகதாது அணைக்கு அனுமதியளிக்க எதிர்ப்பு தெரிவித்து மத்திய மந்திரியுடன் தமிழக சட்டமன்ற கட்சிகளின் பிரதிநிதிகள் குழு சந்தித்தனர். மத்திய நீர்வளத்துறை மந்திரி கஜேந்திர சிங் ஷெகாவத்தை சந்தித்த  பின் மிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

சுமார் 45 நிமிடத்திற்கும் மேலாக மத்திய அமைச்சருடன் பேசினோம். மேகதாது அணை - மத்திய அரசு துணைபோக கூடாது என வலியுறுத்தினோம்.  காவிரி மேலாண்மை ஆணையத்தின் ஒப்புதல் இல்லாமல் எந்த திட்டத்திற்கும் அனுமதி வழங்கப்படாது என தமிழக அனைத்துக்கட்சி குழுவினரிடம் மத்திய நீர்வளத் துறை மந்திரி ஷெகாவத் உறுதி அளித்துள்ளார். மேகதாது அணையை கட்டுவதற்கான சாத்தியக் கூறுகள் கர்நாடகாவுக்கு இல்லை என மத்திய மந்திரி கூறினார். 

மேகதாது அணைக்கு அனுமதி தரக்கூடாது என மத்திய நீர்வளத்துறை  வலியுறுத்தினோம். கர்நாடக அரசின் விரிவான திட்ட அறிக்கையை ஏற்க மாட்டோம். கர்நாடகாவில் மேகதாது அணை கட்டுவதற்கு ஒன்றிய அரசு துணை போகக் கூடாது என்று அழுத்தமாக வலியுறுத்தினோம். கீழ் பாசன மாநிலங்களிடம் அனுமதி இல்லை, எனவே காவிரி நீர் மேலாண்மை வாரிய ஒப்புதலும் தேவை அவையும் கொடுக்கப்படவில்லை என மத்திய நீர்வளத்துறை மந்திரி தெரிவித்துள்ளார்.

Next Story