தடுப்பூசி போட்டும் பாதிக்கப்பட்டவர்கள் 80% டெல்டா வகை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் - ஆய்வில் தகவல்


தடுப்பூசி போட்டும் பாதிக்கப்பட்டவர்கள் 80% டெல்டா வகை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் - ஆய்வில் தகவல்
x
தினத்தந்தி 16 July 2021 12:36 PM GMT (Updated: 2021-07-16T18:06:26+05:30)

ஆய்வு என்பது தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களில் கொரோன பாதித்தவர்களின் மருத்துவ குணாதிசயம் மற்றும் மரபணு பகுப்பாய்வு ஆகும்.

புதுடெல்லி

இந்தியாவில்  தடுப்பூசி போடப்பட்டு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்  பெரும்பாலானவர்கள் மாறுபட்ட டெல்டா வகை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஆய்வு காட்டுகிறது.இவர்கள் நோய்பாதிப்புக்கு முன் குறைந்தது ஒரு தடுப்பூசி டோஸ் போட்டு இருந்தனர். 

இருப்பினும், தடுப்பூசி போட்ட நபர்களிடையே இறப்பு விகிதம் மிகக் குறைவாக இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது.  இந்த ஆய்வில் மொத்தம்  677  கொரோனா பாதித்தவர்கள் எடுத்துகொள்ளப்பட்டனர். இதில்  71 பேர் கோவாக்சின் தடுப்பூசியை எடுத்துக் கொண்டவர்கள். மீதமுள்ள 604 பேருக்கு கோவிஷீல்ட் தடுப்பூசி போடப்ப்ப்டு உள்ளது. பங்கேற்றவர்களில் இருவர் சீன சினோபார்ம் தடுப்பூசியையும் எடுத்துக் கொண்டவர்கள் ஆவார்கள்.தடுப்பூசி போட்ட நபர்களிடையே மூன்று இறப்புகளும் பதிவாகியுள்ளன.

 இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில்  ஆய்வின் மூலம் தெரியவந்து உள்ளவை:

* இந்த  ஆய்வு என்பது தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களில்  கொரோன பாதித்தவர்களின்  மருத்துவ குணாதிசயம் மற்றும் மரபணு பகுப்பாய்வு ஆகும்.

* ஆய்வில் எதிர்பாராதவிதமாக நோய்த்தொற்றுகளின் ஒட்டுமொத்த பெரும்பான்மை (86.09%) டெல்டா மாறுபாட்டால் (பி .1.617.2) ஏற்பட்டது.

* கொரோனா பாதிப்புகளில்  9.8 சதவீதம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.  அதே நேரத்தில் பாதிப்புகளில் 0.4 சதவீதம்  மட்டுமே இறப்புகள் காணப்பட்டன.

* தடுப்பூசி மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதையும் இறப்பு விகிதத்தையும் குறைப்பதாக ஆய்வு தெரிவிக்கிறது.

* வடக்கு, தெற்கு, மேற்கு, கிழக்கு, வடகிழக்கு மற்றும் இந்தியாவின் மத்திய பகுதி என மராட்டியம், கேரளா, குஜராத், உத்தரகாண்ட், கர்நாடகா, மணிப்பூர், அசாம், ஜம்மு-காஷ்மீர், சண்டிகார், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், பஞ்சாப், புதுச்சேரி, டெல்லி, மேற்கு வங்காளம் மற்றும் தமிழ்நாடு ஆகிய 17 மாநிலங்ககளில் மொத்தம் 677 கொரோனா பாதித்தவர்களின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டன.

* மொத்தம் 482 பாதிப்புகள் (71%) ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட அறிகுறிகளுடன்  இருந்தன, 29 சத்வீதம்  அறிகுறியற்ற சார்ஸ்-கோவ்-2 தொற்றுநோயைக் கொண்டிருந்தன.

* காய்ச்சல் (69%) உடல் வலி, தலைவலி மற்றும் குமட்டல் (56%), இருமல் (45%), தொண்டை புண் (37%), வாசனை மற்றும் சுவை இழப்பு (22%), வயிற்றுப்போக்கு (6%) ), மூச்சுத் திணறல் (6%) மற்றும் 1% கண் எரிச்சல் மற்றும் சிவத்தல் ஆகியவற்றைக்  அறிகுறிகளாக கொண்டிருந்தன.

* தடுப்பூசிக்கு பிந்தைய பாதிப்பு நோய்த்தொற்றுகள் முக்கியமாக டெல்டா மற்றும் கப்பா வகைகளாக இருந்தன.

* 71 (10.5%) பேர் கோவாக்சின்  தடுப்பூசி போடப்பட்டவர்கள்,  604 (89.2%) பேர் கோவிஷீல்டு தடுப்பூசி போடப்பட்டவர்கள், 2 (0.3%) பேர் சினோபார்ம் தடுப்பூசி போட்டு உள்ளவர்கள். 

* 3 பேர் இறந்தனர் (0.4%), 67 (9.9%) பாதிப்புகள்  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவை ஆகும்.

Next Story