மராட்டியத்தில் ஊழியர்களுக்கு தொழிற்சாலை நிர்வாகங்கள் தடுப்பூசி போட வேண்டும் - சுகாதாரத்துறை மந்திரி வலியுறுத்தல்


மராட்டியத்தில் ஊழியர்களுக்கு தொழிற்சாலை நிர்வாகங்கள் தடுப்பூசி போட வேண்டும் - சுகாதாரத்துறை மந்திரி வலியுறுத்தல்
x
தினத்தந்தி 16 July 2021 11:02 PM GMT (Updated: 16 July 2021 11:02 PM GMT)

மராட்டியத்தில் தொழிற்சாலை நிர்வாகங்கள் தங்கள் ஊழியர்களுக்கு கண்டிப்பாக தடுப்பூசி போட வேண்டும் என சுகாதாரத்துறை மந்திரி ராஜேஷ் தோபே வலியுறுத்தியுள்ளார்.

மும்பை,

மராட்டியத்தில் 3-வது கொரோனா அலையை தடுக்க அரசு பொது மக்களுக்கு அதிகளவில் தடுப்பூசி போட ஆர்வம் காட்டி வருகிறது. எனினும் போதிய அளவு மருந்து கையிருப்பு இல்லாததால் குறைந்த அளவில் தான் பொது மக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தொழிற்சாலை நிர்வாகங்கள் தங்களது தொழிலாளர்கள், ஊழியர்களுக்கு கண்டிப்பாக தடுப்பூசி போட வேண்டும் என சுகாதாரத்துறை மந்திரி ராஜேஷ் தோபே கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், " தொழிற்சாலை நிர்வாகங்கள் அவர்களது ஊழியர்கள், பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடுவதை தொடங்க வேண்டும். அப்போது கொரோனா பிரச்சினைக்கு மத்தியிலும் அவர்களால் தொழிற்சாலைகளை இயக்க முடியும். இதேபோல வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 171 கிராமங்களில் தடுப்பூசி போட மாவட்ட நிர்வாகம் முன்னுரிமை அளிக்க வேண்டும். " என்றார்.

Next Story