உ.பி. அரசுக்கு பாராட்டு: உண்மையை மோடியின் நற்சான்றிதழால் மறைத்துவிட முடியாது - பிரியங்கா


உ.பி. அரசுக்கு பாராட்டு: உண்மையை மோடியின் நற்சான்றிதழால் மறைத்துவிட முடியாது - பிரியங்கா
x
தினத்தந்தி 17 July 2021 2:55 AM GMT (Updated: 2021-07-17T08:25:32+05:30)

உண்மையை மோடியும், யோகி ஆதித்யநாத்தும் மறக்கலாம். ஆனால், வேதனையை தாங்கிய மக்கள் மறக்க மாட்டார்கள் என பிரியங்கா கூறியுள்ளார்.

புதுடெல்லி, 

பிரதமர் மோடி நேற்று முன்தினம் உத்தரபிரதேச மாநிலம் வாரணாசிக்கு சென்றார். அங்கு வளர்ச்சித்திட்ட தொடக்க விழாவில் பேசிய அவர், உத்தரபிரதேசத்தில் கொரோனாவை சிறப்பாக கட்டுப்படுத்தியதாக யோகி ஆதித்யநாத் அரசுக்கு பாராட்டு தெரிவித்தார்.

இதற்கு காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

கொரோனா இரண்டாவது அலையின்போது யோகி ஆதித்யநாத் அரசு இழைத்த கொடுமைகள், அலட்சியம், தவறான நிர்வாகம் ஆகியவை பற்றிய உண்மைகளை மோடியின் நற்சான்றிதழால் மறைத்துவிட முடியாது.

மக்கள் எண்ணற்ற இன்னல்களை அனுபவித்துள்ளனர். இந்த உண்மையை மோடியும், யோகி ஆதித்யநாத்தும் மறக்கலாம். ஆனால், வேதனையை தாங்கிய மக்கள் மறக்க மாட்டார்கள்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story