இன்னும் 2 ஆண்டுகள் எடியூரப்பாவே கர்நாடக முதல்-மந்திரியாக இருப்பார் - மந்திரி சுதாகர் பேட்டி


இன்னும் 2 ஆண்டுகள் எடியூரப்பாவே கர்நாடக முதல்-மந்திரியாக இருப்பார் - மந்திரி சுதாகர் பேட்டி
x
தினத்தந்தி 17 July 2021 8:48 PM GMT (Updated: 2021-07-18T02:18:29+05:30)

இன்னும் 2 ஆண்டுகள் எடியூரப்பாவே கர்நாடக முதல்-மந்திரியாக இருப்பார் என அந்த மாநிலத்தின் சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் தெரிவித்துள்ளார்.

பெங்களூரு,

கர்நாடக முதல்-மந்திரியாக எடியூரப்பா பதவியேற்று 2 ஆண்டுகள் நிறைவு பெற இருக்கிறது. அதற்கு முன்பாக பா.ஜனதா மேலிடம் எடியூரப்பாவை டெல்லிக்கு அழைத்து பதவியை ராஜினாமா செய்யும்படி வலியுறுத்தி இருப்பதாக தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில் பெங்களூருவில் நேற்று கர்நாடக சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது;-

“பா.ஜனதா மேலிட தலைவர்களின் அழைப்பை ஏற்று முதல்-மந்திரி எடியூரப்பா டெல்லிக்கு சென்றிருந்தார். மேலிட தலைவர்களை சந்தித்த பின்பு, இன்னும் 2 ஆண்டுகள் முதல்-மந்திரி பதவியில் நீடிப்பேன் என்றும், அவரது தலைமையிலேயே 2023-ம் ஆண்டு நடைபெறும் சட்டசபை தேர்தல் சந்திக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். 

இதன் மூலம் முதல்-மந்திரி பதவியில் இருந்து எடியூரப்பா மாற்றப்படுவார் என்று பரவிய வதந்திகளுக்கு, அவரே முற்றுப்புள்ளி வைத்துள்ளார். பா.ஜனதா மேலிடமும் இந்த விவகாரத்தில் சரியான முடிவை எடுத்து, எடியூரப்பாவுக்கு தெரிவித்துள்ளது. இனிமேலாவது எடியூரப்பாவின் தலைமை மாற்றப்படுவது பரவும் வதந்திகள் நிற்க வேண்டும்.

இந்த விவகாரத்தில் அடுத்த 2 ஆண்டுகள் எடியூரப்பாவே முதல்-மந்திரியாக இருப்பார் என்ற நம்பிக்கை உள்ளது. எடியூரப்பாவை மாற்றும் பேச்சுக்கே இடமில்லை. அவரது தலைமையின் கீழ் பணியாற்ற அனைவரும் தயாராக இருக்கிறோம்.”

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story