கேரள காவல்துறைக்கு இன்ஸ்டாகிராமில் 10 லட்சம் பின்தொடர்பாளர்கள்


கேரள காவல்துறைக்கு இன்ஸ்டாகிராமில் 10 லட்சம் பின்தொடர்பாளர்கள்
x
தினத்தந்தி 17 July 2021 10:38 PM GMT (Updated: 17 July 2021 10:38 PM GMT)

கேரள காவல்துறையின் இன்ஸ்டாகிராம் பக்கம் 10 லட்சம் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்து இருக்கிறது.

திருவனந்தபுரம்,

கேரள காவல்துறையின் செயல்பாடுகளை உலகம் முழுவதும் கொண்டு சேர்க்கும் வகையில் கடந்த 2018-ம் ஆண்டு சமூக வலைத்தள பக்கங்கள் தொடங்கப்பட்டன. போலீஸ் ஏ.டி.ஜி.பி. ஆபிரகாம் மேற்பார்வையில் செயல்பட்டு வரும் இந்த சமூக வலைத்தள பக்கங்கள் தொடர்ச்சியாக பின்தொடர்பாளர்களை பெற்று வருகின்றன.

இதில் சமீபத்திய நிகழ்வாக கேரள காவல்துறையின் இன்ஸ்டாகிராம் பக்கம் 10 லட்சம் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்து இருக்கிறது. அந்தவகையில் ராஜஸ்தான் போலீஸ் மற்றும் பெங்களூரு நகர போலீஸ் பக்கங்களை பின்னுக்குத்தள்ளி இந்த சாதனையை படைத்திருப்பதாக கேரள போலீஸ் தலைமையகம் செய்தி வெளியிட்டு உள்ளது.

இதன் மூலம் சர்வதேச போலீஸ் துறையான இன்டர்போல் மற்றும் அமெரிக்காவின் நியூயார்க் போலீசை கடந்து கேரள போலீசின் புகழ் பரவி வருவதாகவும் கூறியுள்ளது. முன்னதாக கேரள காவல்துறையின் பேஸ்புக் பக்கம் 17 லட்சம் பின்தொடர்பாளர்களை பெற்று சாதனை படைத்திருந்தது. இதுவும் நியூயார்க் காவல்துறை மற்றும் குயீன்ஸ்லாந்து காவல்துறையை விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story