ஒடிசாவில் 10,12 ஆம் வகுப்புகளுக்கு வரும் 26 ஆம் தேதி முதல் பள்ளிகள் திறப்பு


ஒடிசாவில் 10,12 ஆம் வகுப்புகளுக்கு வரும் 26 ஆம் தேதி முதல் பள்ளிகள் திறப்பு
x
தினத்தந்தி 17 July 2021 11:36 PM GMT (Updated: 17 July 2021 11:36 PM GMT)

ஒடிசாவில் 10,12 ஆம் வகுப்புகளுக்கு வரும் 26 ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படுகின்றன.

புவனேஷ்வர்,

நாடு முழுவதும் கொரோனா வைரசின் 2-வது அலை பரவல் சற்று குறைந்துள்ளது.  இதனால், பல்வேறு கட்டுப்பாடுகளும் தளர்த்தப்பட்டு வருகின்றன. 

அந்த வகையில், ஒடிசாவில் வரும் 26 ஆம் தேதி முதல் 10,12 ஆம் வகுப்புகளுக்காக பள்ளிகள் திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதற்கான நிலையான வழிகாட்டி நெறிமுறைகளும் வெளியிடப்பட்டுள்ளன. ஆசிரியர்கள் தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த விதிகள் அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கும் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story