பாராளுமன்றம் நாளை கூடுகிறது- முக்கிய விவகாரங்களை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டம்


பாராளுமன்றம் நாளை கூடுகிறது- முக்கிய விவகாரங்களை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டம்
x
தினத்தந்தி 18 July 2021 12:47 AM GMT (Updated: 18 July 2021 12:51 AM GMT)

பாராளுமன்றம் நாளை கூட உள்ள நிலையில் டெல்லியில் இன்று அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, கடந்த ஆண்டு 3 நாடாளுமன்ற கூட்டத்தொடர்கள் முன்கூட்டியே முடித்துக்கொள்ளப்பட்டன. குளிர்கால கூட்டத்தொடர் ரத்து செய்யப்பட்டது. இந்த ஆண்டு பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்தபோதிலும், 5 மாநில சட்டசபை தேர்தல்களை கருத்திற்கொண்டு, பாதியிலேயே முடித்துக்கொள்ளப்பட்டது.  இந்தநிலையில், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர், வருகிற 19-ந் தேதி தொடங்குகிறது. ஆகஸ்டு13-ந் தேதி வரை இத்தொடர் நடக்கிறது.

இந்தக் கூட்டத்தொடரில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு, ரபேல் விமான ஒப்பந்த முறைகேடு புகாா் தொடா்பாக பிரான்ஸ் விசாரணைக்கு உத்தரவிட்டிருப்பது, விவசாயிகள் போராட்டம், பெட்ரோல், டீசல் விலை உயர்வு  உள்ளிட்ட விவகாரங்களை எதிா்க்கட்சிகள் எழுப்பும் என எதிா்பாா்க்கப்படுகிறது.   மழைக்கால கூட்டத்தொடரில் 40 மசோதாக்கள், 5 அவசர சட்டங்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.  

இதற்கிடையே,  பாராளுமன்ற கூட்டத்தொடரை சுமூகமாக நடத்தும் முய்ற்சியாக இன்று அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு பாராளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சகம் அழைப்பு விடுத்துள்ளதாக கூறப்படுகிறது. மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா தலைமையில் இந்தக் கூட்டம் நடைபெற உள்ளது.  அனைத்துக்கட்சிகளின் மக்களவை தலைவர்கள் இந்தக் கூட்டத்தில் பிரதமர் மோடியும் கலந்து கொள்ள வாய்ப்புள்ளதாக ஏ.என்.ஐ செய்தி வெளியிட்டுள்ளது. 


Next Story