திருப்பதி கோவிந்தராஜசாமி கோவிலில் ஜேஷ்டாபிஷேகம் நாளை தொடங்குகிறது


திருப்பதி கோவிந்தராஜசாமி கோவிலில் ஜேஷ்டாபிஷேகம் நாளை தொடங்குகிறது
x
தினத்தந்தி 18 July 2021 3:23 AM GMT (Updated: 2021-07-18T08:53:47+05:30)

திருப்பதி கோவிந்தராஜசாமி கோவிலில் ஜேஷ்டாபிஷேகம் நாளை தொடங்குகிறது.

திருமலை, 

திருப்பதி கோவிந்தராஜசாமி கோவிலில் நாளை (திங்கட்கிழமை) முதல் 21-ந்தேதி வரை 3 நாட்கள் வருடாந்திர ஜேஷ்டாபிஷேகம் நடக்கிறது. அதில் பக்தர்கள் பங்கேற்க அனுமதியில்லை. நாளை கவச திவாசம், 20-ந்தேதி கவச பிரதிஷ்டை, 21-ந்தேதி கவச சமர்ப்பணம் நடக்கிறது.

மேற்கண்ட 3 நாட்களுக்கு மூலவர் மற்றும் உற்சவர் கோவிந்தராஜசாமிக்கு மஞ்சள், குங்குமம், சந்தனம், பால், தயிர், தேன், இளநீர் ஆகிய சுகந்த திரவியங்களால் ஸ்நாபன திருமஞ்சனம் நடக்கிறது. அதன் பிறகு மகாசாந்தி ஹோமம், மாலை உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி சமேத கோவிந்தராஜசாமி சிறப்பு அலங்காரத்தில் திருச்சி வாகனத்தில் எழுந்தருளி கோவிலின் உள் பிரகாரத்தில் வலம் வருகிறார்கள்.

மேற்கண்ட தகவலை திருமலை-திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Next Story