கொரோனா பாதிப்பு: கேரளாவில் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 1.25 லட்சமாக உயர்வு


கொரோனா பாதிப்பு: கேரளாவில் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 1.25 லட்சமாக உயர்வு
x
தினத்தந்தி 18 July 2021 7:03 PM GMT (Updated: 18 July 2021 7:05 PM GMT)

கேரளாவில் நேற்று ஒருநாளில் மட்டும் தொற்று பாதிப்பால் 84 பேர் உயிரிழந்துள்ளனர்.

திருவனந்தபுரம்,

கேரளாவில் கொரோனா வைரஸ் தொற்று கட்டுக்குள் வர மறுக்கிறது. நாட்டிலேயே தொற்று பாதிப்பு அதிகம் உள்ள மாநிலமாக தற்போது கேரளாதான் உள்ளது. கேரளாவில் நேற்றைய கொரோனா பாதிப்பு விவரத்தை அம்மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:- 
 
கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 13,956- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  தொற்று பாதிப்பில் இருந்து 13,613- பேர் குணம் அடைந்துள்ளனர். தொற்று பாதிப்பைக் கண்டறிய 1,30,553- மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. 

கேரளாவில் கொரோனா தொற்று பாதிப்பு விகிதம் 10.69 சதவிகிதமாக உள்ளது.  கொரோனா தொற்று பாதிப்பால் ஒரே நாளில் 84 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 15,350- ஆக உயர்ந்துள்ளது. தொற்று பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 1,25,041- ஆக உயர்ந்துள்ளது. 


Next Story