கர்நாடகத்தில் புதிதாக 1,708 பேருக்கு கொரோனா- 36 பேர் பலி


Photo Credit: PTI
x
Photo Credit: PTI
தினத்தந்தி 18 July 2021 7:54 PM GMT (Updated: 2021-07-19T01:24:46+05:30)

கர்நாடகத்தில் புதிதாக 1,708 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

பெங்களூரு, 

கர்நாடக அரசின் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

கர்நாடகத்தில் நேற்று 1 லட்சத்து 56 ஆயிரத்து 564 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 1,708 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருப்பது உறுதியானது. இதனால் மாநிலத்தில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 28 லட்சத்து 83 ஆயிரத்து 947 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 36 பேர் உயிரிழந்தனர். இதனால் வைரஸ் தொற்றுக்கு இறந்தவர்களின் எண்ணிக்கை 36 ஆயிரத்து 157 ஆக உயர்ந்துள்ளது.

மாநிலத்தில் மருத்துவ சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை 29 ஆயிரத்து 291 ஆக குறைந்துள்ளது. ஒரே நாளில் 2,463 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினர். இதனால் இதுவரை குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 28 லட்சத்து 18 ஆயிரத்து 476 ஆக அதிகரித்துள்ளது.


Next Story