தேசிய செய்திகள்

கொரோனா பாதிப்பு: டெல்லியில் இன்று உயிரிழப்பு இல்லை + "||" + Delhi reports 0 deaths, 51 new #COVID19 positive cases, and 80 recoveries in the last 24 hours.

கொரோனா பாதிப்பு: டெல்லியில் இன்று உயிரிழப்பு இல்லை

கொரோனா பாதிப்பு: டெல்லியில் இன்று உயிரிழப்பு இல்லை
டெல்லியில் கொரோனா தொற்றுடன் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 592- ஆக குறைந்துள்ளது.
புதுடெல்லி,

இந்தியாவில் கோர தாண்டவம் ஆடிய கொரோனா வைரசின் 2-வது அலை தற்போது கணிசமாக கட்டுக்குள் வந்துள்ளது. கேரளா, மராட்டியம் உள்ளிட்ட சில மாநிலங்களை தவிர  பிற மாநிலங்களில் கொரோனா தொற்று பரவல் கட்டுக்குள் வந்துள்ளது.  குறிப்பாக தலைநகர் டெல்லியில் தொற்று பாதிப்பு கடந்த சில வாரங்களாக இரட்டை இலக்க எண்களிலேயே பதிவாகி வருகிறது. அந்த வகையில், இன்று 51 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  

தொற்று பாதிப்பில் இருந்து இன்று 80- பேர் குணம் அடைந்துள்ளனர். நிம்மதி அளிக்கும் வகையில் தொற்று பாதிப்பால் இன்று உயிரிழப்பு எதுவும் பதிவாகவில்லை. கொரோனா தொற்றுடன் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 592- ஆக குறைந்துள்ளது.  டெல்லியில் இதுவரை கொரோனா தொற்றில் இருந்து குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 14 லட்சத்து 09 ஆயிரத்து 910- ஆக உள்ளது. அதேபோல், தொற்று பாதிப்பால் இதுவரை ஏற்பட்ட உயிரிழப்பு எண்ணிக்கை 25,027- ஆக உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. அமெரிக்க வெளியுவு துறை செய்தி தொடர்பு அதிகாரிக்கு கொரோனா பாதிப்பு உறுதி
அமெரிக்காவின் வெளியுவு துறை செய்தி தொடர்பு அதிகாரி நெட் பிரைஸ் கொரோனா பாதிப்புக்கு ஆளாகியுள்ளார்.
2. கேரளாவில் குறைந்து வரும் கொரோனா; 11,699 பேருக்கு பாதிப்பு உறுதி
கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 11,699 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.
3. கொரோனா பாதிப்பு; பெங்களூருவில் அக்டோபர் 11 வரை இரவு ஊரடங்கு நீட்டிப்பு
கர்நாடகாவின் பெங்களூருவில் கொரோனா பாதிப்புகளை முன்னிட்டு வருகிற அக்டோபர் 11 வரை இரவுநேர ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது.
4. டெல்லியில் மேலும் 32 பேருக்கு கொரோனா
டெல்லியில் கொரோனா தொற்று பாதிப்பு விகிதம் 0.06 சதவிகிதமாக உள்ளது.
5. மராட்டியத்தில் இன்று மேலும் 3,206 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
மராட்டியத்தில் இன்று மேலும் 3,206 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.