பழங்குடியினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்களுக்கு மந்திரியாக வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது - பிரதமர் மோடி


பழங்குடியினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்களுக்கு மந்திரியாக வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது - பிரதமர் மோடி
x
தினத்தந்தி 19 July 2021 6:46 AM GMT (Updated: 2021-07-19T12:52:01+05:30)

பழங்குடியின அமைச்சர்கள் குறித்த அறிமுகத்தை கேட்க சிலர் தயாராக இல்லை என மக்களவையில் பிரதமர் மோடி கூறினார்.

புதுடெல்லி,

டெல்லியில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் காலை 11 மணிக்கு தொடங்கியது. அவை தொடங்கியதும் மறைந்த உறுப்பினர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர் புதிய மந்திரிகளை உறுப்பினர்களுக்கு பிரதமர் மோடி அறிமுகம் செய்து வைத்தார். தொடர்ந்து மக்களவை பிரதமர் மோடி பேசியதாவது:-

பழங்குடியினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் அமைச்சர்களாகிவிட்டதால் பாராளுமன்றத்தில் உற்சாகம் இருக்கும் என்று நினைக்கிறேன். இந்த முறை விவசாய மற்றும் கிராமப்புற பின்னணியில் உள்ள எங்கள் சகாக்களுக்கு,  மந்திரியாக வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. புதிதாக பொறுப்பேற்றுள்ள பல மந்திரிகள் விவசாயிகளின் பிள்ளைகள். பட்டியல் இனத்தவர்கள் மந்திரிகளாக ஆவதை சிலரால் ஜீரணிக்க முடியவில்லை என்றார். 

பிரதமர் மோடி உரையாற்றும் போது எதிர்கட்சிகள் அமலியில் ஈடுபட்டதால் மக்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

Next Story