பெட்ரோல் - டீசல் விலை உயர்வு எதிரொலி: நாடாளுமன்றத்துக்கு சைக்கிளில் வந்த திரிணமுல் எம்.பி.க்கள்


பெட்ரோல் - டீசல் விலை உயர்வு எதிரொலி: நாடாளுமன்றத்துக்கு சைக்கிளில் வந்த திரிணமுல் எம்.பி.க்கள்
x
தினத்தந்தி 19 July 2021 7:20 AM GMT (Updated: 2021-07-19T12:50:06+05:30)

பெட்ரோல் - டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து திரிணமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள் இன்று நாடாளுமன்றத்துக்கு சைக்கிளில் வந்தனர்.

புதுடெல்லி,

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று காலை 11 மணிக்கு கூடியது.இந்தநிலையில்  முதல்நாளான இன்று பெட்ரோல் - டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து திரிணமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள் இன்று நாடாளுமன்றத்துக்கு சைக்கிளில் வந்தனர்.

 டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்த பாதாகைகளை தங்கள் உடம்பில் கட்டியிருந்தனர். நாடாளுமன்ற நுழைவு வாயிலுக்கு வந்த அவர்கள் பெட்ரோல் - டீசல் விலை உயர்வைக் கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.

Next Story