ஆர்.எஸ்.பாரதி மீதான வழக்கு ரத்து சுப்ரீம் கோர்ட்


ஆர்.எஸ்.பாரதி மீதான வழக்கு ரத்து சுப்ரீம் கோர்ட்
x
தினத்தந்தி 19 July 2021 8:59 AM GMT (Updated: 19 July 2021 8:59 AM GMT)

திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதிக்கு எதிரான வன்கொடுமை தடைச் சட்ட வழக்கை சுப்ரீம் கோர்ட் ரத்து செய்தது.

புதுடெல்லி,

பட்டியலின மக்களுக்கு எதிராக கருத்து தெரிவித்ததாகக் கூறி திமுக அமைப்புச் செயலாளா் ஆா்.எஸ்.பாரதிக்கு மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அவருக்கு எதிராக வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் சென்னை தேனாம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணைக்கு தடை விதிக்கக் கோரி சென்னை ஐகோர்ட்டில் ஆா்.எஸ்.பாரதி வழக்கு தொடர்ந்தார்.

இந்த மனுவை விசாரித்த சென்னை ஐகோர்ட், மனுவை தள்ளுபடி செய்ததுடன், ஆா்.எஸ். பாரதிக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரம் இருப்பதாகத் தெரிவித்தது. இதைத் தொடா்ந்து, இந்த உத்தரவை எதிர்த்து ஆா்.எஸ். பாரதி தரப்பில் வழக்கறைஞர் அமித் ஆனந்த் திவாரி சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார்.

அந்த மனுவில், ஆா்.எஸ். பாரதி பட்டியலின அல்லது பழங்குடியினருக்கு எதிராக வெறுப்பு, விரோத உணா்வுகளை தூண்டும் வகையில் பேசவில்லை எனத் குறிப்பிடப்பட்டிருந்தது. இதுதொடர்பான மேல்முறையீட்டு வழக்கு உச்சசீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆர்.எஸ்.பாரதி உள்நோக்கத்துடன் எதுவும் பேசவில்லை என கூறி வன்கொடுமை தடைச் சட்ட வழக்கை சுப்ரீம் கோர்ட் ரத்து செய்தது.

Next Story